Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நாட்டையே உலுக்கிய மணிப்பூர் கொடூரம்.. கும்பலில் மேலும் ஒரு குற்றவாளியை தூக்கிய காவல்துறை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 20, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
1
நாட்டையே உலுக்கிய மணிப்பூர் கொடூரம்.. கும்பலில் மேலும் ஒரு குற்றவாளியை தூக்கிய காவல்துறை
79
SHARES
127
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இம்பால்: மணிப்பூரில் 2 குகி பழங்குடியின இளம் பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த பெண்கள் நிர்வாணப்படுத்தி சாலையில் இழுத்து வந்து கும்பல் பலாத்காரம் செய்த நிலையில் அந்த வீடியோவில் இருந்த மேலும் ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடக்கத்தில் இருந்து குகி பழங்குடி சமூகத்தினருக்கு எதிராக மெய்தி சமுதாயத்தினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மே 4 ஆம் தேதி குகி சமூகத்தினரின் வீட்டை எரித்த மெய்தி சமூகத்தின் உள்ளே இருந்த 2 பெண்களை நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்து வந்து கும்பலாக பலாத்காரம் செய்தனர். இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரரையும் கொடூரமாக கொன்றனர். 77 நாட்கள் கழித்து இந்த சம்பவத்தில் வீடியோ நேற்று இரவு வெளியாகி சமூக வலைதளத்தையே ஸ்தம்பிக்க வைத்தது. பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி மணிப்பூர் சம்பவம் குறித்து வேதனை தெரிவித்தார்.

தனது கடமையை செய்யும்: அப்போது பிரதமர் மோடி கூறுகையில், “மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது; என் இதயம் கோபம் நிரம்பி வலிக்கிறது. எந்த குற்றவாளியும் தப்பிக்கமாட்டார்கள் என உறுதியளிக்கிறேன். சட்டம் முழுவலிமையுடன் தனது கடமையை செய்யும். மணிப்பூர் மகள்களுக்கு நடந்த சம்பவத்தை மன்னிக்க முடியாது.” என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இச்சம்பவம் நடந்து 78 நாட்கள் கழித்து குற்றத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கொண்ட கும்பலில் ஒருவரை கண்டுபிடித்து இருப்பதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்தது. அந்த பதைபதைக்க வைக்கும் வீடியோவில், பச்சை டீ சர்ட் அணிந்த ஒரு இளைஞர் , பெண்ணை ஆடைகள் இன்றி அழைத்து செல்வது பதிவாகியிருக்கும். 4 பேர் கைது: அந்த பச்சை சட்டை அணிந்த நபரை இன்று காலை மணிப்பூர் போலீஸ் கைது செய்தது. 32 வயதான அந்த இளைஞரின் பெயர் ஹுய்ரெம் ஹெரொதாஸ் மெய்தி. சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்ட அந்த பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சியை ஆய்வு செய்த போலீசார், அது ஹுய்ரெம் ஹெரொதாஸ் மெய்தி என்பதை உறுதி செய்து அவரை கைது செய்தனர். இந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு குற்றவாளியை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தெரித்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இதன் மூலம் நாட்டை உலுக்கிய மணிப்பூர் சம்பவத்தில் இதுவரை கைது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூர் விவகாரம்: பிரதமர் பேசியது மட்டும் போதாது.. இந்த 2 ஆக்‌ஷன் கட்டாயம் வேணும்.. பொங்கிய ஒவைசி

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட்டால்தான் குறுவைப் பயிரைக் காக்க முடியும்: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

Next Post

கோவை மாநகரில் கவனிப்பாரற்ற மூத்த குடிமக்கள் பூங்கா!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கோவை மாநகரில் கவனிப்பாரற்ற மூத்த குடிமக்கள் பூங்கா!

கோவை மாநகரில் கவனிப்பாரற்ற மூத்த குடிமக்கள் பூங்கா!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    மணிப்பூரில் நடப்பது இந்துக்கள் கிறிஸ்தவர்கள் மோதல் இதுவே உண்மை முதன்முதலாக இந்துக்களின் கை ஓங்கி இருக்கிறது எனவே இதைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை ஆதி காலத்திலிருந்து இந்துக்கள் மாற்று சமயத்தில் முக்கியமாக முஸ்லிம்களால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் மணிப்பூர் விவகாரத்தில் மட்டுமே இந்துக்களின் கையை ஓங்கி இருக்கிறது இது எனக்கு தவறாக தெரியவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In