Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திருப்பத்தூரில் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்.. பாஜக நிர்வாகி வினோத் கைது.. போலீஸ் அதிரடி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 22, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
திருப்பத்தூரில் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்.. பாஜக நிர்வாகி வினோத் கைது.. போலீஸ் அதிரடி!
7
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருப்பத்தூர்: அடிதடி வழக்கில் சாட்சியம் அளிக்க வந்த விசாரணை அதிகாரியான காவல் உதவி ஆய்வாளரை மிரட்டிய வழக்கில் திருப்பத்தூர் மாவட்ட பாஜக நிர்வாகி வினோத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள வெள்ளக்குட்டை என்ற பகுதியைச் சேர்ந்தவர் வினோத். திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க இளைஞரணி துணை அமைப்பளாராக வினோத் உள்ளார். இவர் கடந்த 2014 -ம் ஆண்டு ஆலங்காயம் பகுதியில் சிலருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக வினோத் மீது அடிதடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு நேற்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் வினோத் ஆஜர் ஆனார். இந்த வழக்கில் விசாரணை அதிகாரியான ஆலங்காயம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஜெகநாதனும் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது எனக்கு எதிராகவே சாட்சி சொல்ல வருகிறாயா? என நீதிமன்ற வளாகத்தில் வைத்தே எஸ்.ஐ ஜெகநாதனுக்கு வினோத் கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக எஸ்.ஐ ஜெகநாதன் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் வினோத் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாஜக நிர்வாகி வினோத்தை தேடிவந்தனர்.

இந்த நிலையில், ஆலயங்காயத்தில் வைத்து வினோத்தை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அது குறித்த விவரங்கள் வருமாறு:- இன்று காலை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காற்றாலை பண்ணையின் பொது மேலாளரான பிரேசில் நாட்டை சேர்ந்த கார்லஸ் ஹெர்பர்ட் பாரோஸ் என்பவரை, ஒப்பந்த பணிகளை எடுப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திருநெல்வேலி மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில் வழக்கறிஞர் சுரேஷ் மார்த்தாண்டம் என்பவர் அடியாட்களுடன் காற்றாலை அமைந்திருக்கும் இடத்திற்கு சென்று அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சிலரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து கார்லஸ் ஹெபார்ட் பணகுடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், பாஜக நிர்வாகி பாலகிருஷ்ணன், பாலகிருஷ்ணனின் மகன் பாலாஜி மற்றும் வழக்கறிஞர் சுரேஷ் மார்த்தாண்டம் உள்ளிட்டோர் மீது ஏழு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மணிப்பூரில் 114 பேர் பலி.. பெண்கள் பாலியல் வன்கொடுமை! சிபிஐ விசாரணை கேட்கும் குக்கி எம்எல்ஏக்கள்

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

‘ஜீவன் பிரமான்’ திட்டம் மூலம் ஓய்வூதியர் உயிர்வாழ் சான்றிதழ்: வீட்டிலிருந்தபடியே சமர்ப்பிக்க ஏற்பாடு

Next Post

ரஜினிகாந்த் அறக்கட்டளை பெயரில் மோசடி: காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரஜினிகாந்த் அறக்கட்டளை பெயரில் மோசடி: காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

ரஜினிகாந்த் அறக்கட்டளை பெயரில் மோசடி: காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In