Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மணிப்பூர்: குக்கி பெண்கள் மானபங்கம்..மிசோரமில் இருந்து விரட்டப்பட்ட 41 மைத்தேயிகள் அஸ்ஸாமில் தஞ்சம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 24, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
மணிப்பூர்: குக்கி பெண்கள் மானபங்கம்..மிசோரமில் இருந்து விரட்டப்பட்ட 41 மைத்தேயிகள் அஸ்ஸாமில் தஞ்சம்!
15
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

குவஹாத்தி: மணிப்பூரில் குக்கி இன பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ அந்த இனக்குழுவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

குக்கிகள் பெரும்பான்மையினராக உள்ள மிசோரம் மாநிலத்தில் இருந்து மைத்தேயி மக்கள் வெளியேற்றப்பட்டும் வருகின்றனர். மணிப்பூரின் குக்கி- மைத்தேயி இனக்குழுக்களிடையேயான மோதல் 3 மாதங்களாக தொடருகிறது. இம்மோதல்களைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. மணிப்பூரில் 50,000க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்ட நிலையிலும் வன்முறைகள் தொடருகின்றன. மேலும் 3 மாதங்களாக இணைய சேவை துண்டிக்கப்பட்டிருப்பதால் பல வன்மூறை சம்பவங்களின் கோர முகம் வெளியாகவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் 2 குக்கி இனப் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகைய கொடூரத்தை நிகழ்த்திய மைத்தேயி இனக்குழுவினர் மீது குக்கி இன மக்கள் பெரும் வன்முறையை நிகழ்த்தலாம் எனவும் அச்சம் நிகழ்கிறது. இதனிடையே குக்கி இனக்குழுவினர் அதிகம் வாழும் மிசோரம் மாநிலத்தில் இருந்து மைத்தேயி இனக்குழுவினர் உடனடியாக வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சொந்த பாதுகாப்பு கருதி அனைவரும் வெளியேற குக்கி இனக்குழு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து மிசோரம் மாநிலத்தில் இருந்து மைத்தேயி இனமக்கள் சாரை சாரையாக வெளியேறி வருகின்றனர்.

மிசோரம் மாநிலத்தில் இருந்து உயிருக்கு அஞ்சி தப்பி வெளியேறிய மைத்தேயி மக்கள் தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுவரை மிசோரம் மாநிலத்தில் இருந்து 41 பேர் அஸ்ஸாமில் தஞ்சமடைந்துள்ளனர்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதாக ரூ.35 லட்சம் பறிப்பு: மோசடி கும்பலில் மேலும் ஒருவர் கைது

Next Post

மதுரை ‘எய்ம்ஸ்’ 2028-க்குள் செயல்பாட்டுக்கு வரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல் 

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மதுரை ‘எய்ம்ஸ்’ 2028-க்குள் செயல்பாட்டுக்கு வரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல் 

மதுரை ‘எய்ம்ஸ்’ 2028-க்குள் செயல்பாட்டுக்கு வரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In