Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கூட்டணியை பாஜக முறித்து கொள்ளும் வரை தொடர்வோம்.. “INDIA” நல்லாதானே இருக்கு.. ஓபிஎஸ் சொன்னதை பாருங்க!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 20, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
கூட்டணியை பாஜக முறித்து கொள்ளும் வரை தொடர்வோம்.. “INDIA” நல்லாதானே இருக்கு.. ஓபிஎஸ் சொன்னதை பாருங்க!
25
SHARES
40
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை: பாஜக கூட்டணியில் தான் நீடிப்பதாகவும் அவர்களாக கூட்டணியை முறித்துக் கொள்ளும் வரை கூட்டணியில் தொடர்வோம் என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அது மட்டும் இன்றி எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அவர் வரவேற்று இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த்தார். அப்போது அவர் கூறியதாவது:- மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிக்கை வாயிலாக கேட்டுக்கொண்டு இருந்தேன்.

மணிப்பூரில் ஆதிவாசி பெண்களுக்கு நடந்தது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுப்பது அந்த மாநிலத்தின் உரிய கடமையாகவும் மத்திய அரசின் கடமையாகவும் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாங்கள் கருத்துக்களை எடுத்து வைக்க போகிறோம். திண்டுக்கல் சீனிவாசன் கூட்டத்தில் முதல்வராக ஸ்டாலினை ஆக்குவோம் என பேசியது குறித்து கேட்கிறீர்கள்… இது சீனிவாசனிடம் கேட்க வேண்டிய கேள்வி. அவர் எங்கிருந்தாலும் வாழ்க… என்.டி.ஏ கூட்டணி கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு வரவில்லை. அதனால் நான் செல்லவில்லை” என்றார். அப்போது செய்தியாளர்கள் ஒருங்கிணைப்பாளராக நீங்கள்தானே நீடித்து வருகிறீர்கள் என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த ஓபிஎஸ், உங்களுக்கு புரிந்து இருக்கிறது. புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டும்” என்றார்.

பாஜக கூட்டணியில் தான் இன்னும் இருக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்ட போது, “அவர்களாக (பாஜக) முறித்துக் கொள்ளும் வரையில் நான் அந்தக் கூட்டணியில் தொடருவேன். மணிப்பூர் விவகாரம்: பிரதமர் பேசியது மட்டும் போதாது.. இந்த 2 ஆக்‌ஷன் கட்டாயம் வேணும்.. பொங்கிய ஒவைசி அமைச்சர் மீதான வழக்குகள் குறித்து கேட்கிறீர்கள்.. அமைச்சர்கள் மீது வழக்கு தொடுத்தால் அதை எதிர்கொண்டு வெற்றி அடைய வேண்டியது அவர்களுடைய பொறுப்பு .. கடமை” என்றார். எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்துள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது, ” கூட்டணிக்கு பெயர் இந்தியன் (இந்தியா) என்று வைத்து இருக்கிறார்கள். அது நல்ல தலைப்புதான். உள்ளபடியே அதை வரவேற்கிறோம்” என்றார்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

எங்களை அக்கும்பலிடம்‌ விட்டுச்‌ சென்றதே போலீசார் தான்‌ – மணிப்பூர் வீடியோவில் இருந்த பெண் குற்றச்சாட்டு

Next Post

கடலோர காவல் படையை சமூக வலைதளத்தில் விமர்சித்த திண்டுக்கல் நபருக்கு முன்ஜாமீன் மறுப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கடலோர காவல் படையை சமூக வலைதளத்தில் விமர்சித்த திண்டுக்கல் நபருக்கு முன்ஜாமீன் மறுப்பு

கடலோர காவல் படையை சமூக வலைதளத்தில் விமர்சித்த திண்டுக்கல் நபருக்கு முன்ஜாமீன் மறுப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In