கோவையில் மேயரின் தம்பியிடம் கொடுத்த கடனை கேட்டவரின் வீட்டு சுவற்றில் சிறுநீர் ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மணியக்காரம்பாளையம் நட்சத்திரா கார்டனில் வசித்து வருபவர் சரண்யா. இவருக்கு வயது 33. இவரது கணவர் கோபிநாத். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திமுகவை சேர்ந்த இவர்கள் 10 ஆண்டுகளாக கோவையில் வசித்து வருகின்றனர். இரண்டரை ஆண்டுகளாக தற்போதுள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். நான்கு வீடுகளை கொண்ட பகுதியில் முன்புற வீட்டில் கோபிநாத் குடும்பம் வசித்து வருகிறது. பின் வீட்டில் கோவை மேயர் கல்பனா, தாய் காளியம்மாள், மற்றும் மேயரின் தம்பி குமார் வசித்து வருகின்றனர்.
கல்பனா மேயர் ஆகுவதற்கு முன் காளியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது மருத்துவ செலவுகளுக்காக கோபிநாத்திடம் குமார் பதினைந்து ஆயிரம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. அதில் ஐந்தாயிரம் மட்டும் திருப்பிக் கொடுத்ததாகவும் மீதி 10,000 ரூபாயை கொடுப்பதற்கு முன் கல்பனா மேயராகி விட்டார் என கூறப்படுகிறது. கொடுத்த பணத்தை கோபிநாத் திரும்பி கேட்டபோது குமார் திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. பல முறை கேட்டும் பணத்தை கொடுக்காததால் கோபிநாத் விரக்தி அடைந்தார்.
அதன் பின் பல விதங்களிலும் குமார் கோபிநாத் குடும்பத்திற்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது எல்லோருக்கும் பொதுவாக இருந்த இரண்டு கேட்டுகளை பூட்டி வைத்துள்ளார். இதனால் ஒரு மாதத்திற்கும் மேலாக கோபிநாத் அவரது காரை எடுக்க முடியவில்லை. சில நாட்களுக்கு முன் மேயர் கல்பனாவும் இங்கு குடும்பத்துடன் குடியேறியுள்ளார். அதன்பின் கோபிநாத் குடும்பத்தின் மீதான டார்ச்சர் அதிகரித்து உள்ளது. கோபிநாத் வீட்டின் சமையலறையின் பின்புறத்தில் கெட்டுப்போன சாப்பாடு வெட்டப்பட்ட கோழிக்கழிவு போன்றவற்றை கொட்டி உள்ளனர். மேலும் வாளியில் சிறுநீர் பிடித்து அதையும் கோபிநாத் வீட்டில் சமையலறை சுவற்றில் மீது குமார் கொட்டியுள்ளார். இவை அனைத்தையும் சிசிடிவி பொருத்தி கோபிநாத் குடும்பத்தினர் வீடியோ எடுத்துள்ளனர்.
தற்போது தமிழக முதல்வர் மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு வீடியோ ஆடியோ ஆதாரங்களுடன் சமர்ப்பித்து கோபிநாத் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழ் ஒன்று தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் அளித்த பதிலாக கூறப்படுவது: அந்த மாதிரி கிடையாது. பணம் கொடுத்ததுக்கு எந்த ஆதாரமும் இல்லை. முதலில் என் கணவரை பற்றி தப்பா போட்டீங்க. இப்ப என் தம்பி, அம்மா வைப்பத்தி சொல்றீங்க. நீங்க போடுறதுல உண்மை இல்லைன்னா, அப்புறம் பிரச்சினை வேற மாதிரி கொண்டு போயிருவோம். எனக்கு எதிரி திமுகவைச் சேர்ந்த கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு தான். அவங்க சொல்லித்தான் நீங்க போடுறீங்க. இனிமே இந்த மாதிரி ஏதாவது போட்டீங்கனா, அதை வேற விதமா சந்திப்பேன். நடு ரோட்டில் உட்கார்ந்து பிரச்சனை பண்ணுவேன் கேஸ் போட்டுடுவேன் என்று கூறினார்.


கோவை மேயரின் தம்பி செய்தது அதிகார திமிர் ஆணவத்தின் உச்சகட்டம்