’’எல்லோரும் தங்கள் பெயருக்கு முன் புரட்சியை சேர்ப்பதால் புரட்சிக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் மதுரை மாநாடு அரசியலில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது’’ என சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியாதவது, ‘’கர்நாடக தன் மாநில நலனை பார்க்கும் போது முதல்வர் ஸ்டாலினும் தனது மாநிலத்தின் நலனை பார்க்க வேண்டாமா? இலங்கை இன படுகொலை, கச்சத்தீவு, தற்போது காவிரி என எல்லாவற்றிலும் தமிழக மக்களுக்கு எதிரான கட்சியாகவே காங்கிரஸ் இருந்து வருகிறது. அந்த கட்சியுடன் இவர் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்.
எனக்குத் தெரிந்த புரட்சி தமிழன் எங்க அண்ணன் சத்யராஜ் மட்டும் தான். நாங்க அவரை அப்படித்தான் அழைப்போம். புரட்சி, வறட்சி என போட்டுக் கொள்ள வேண்டியது தான். ஏனெனில் புரட்சி என்ற சொல் அவ்வளவு கேவலப்பட்டு போய்விட்டது’’ என்றார்.

