Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஹைஅலர்ட்.. லாரி நிறைய ஆர்டிஎக்ஸ் வெடிப்பொருள்? மும்பை டூ கோவா போகுதாம்! ஒரு போனால் டென்ஷன்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 23, 2023 - Updated on July 24, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
ஹைஅலர்ட்.. லாரி நிறைய ஆர்டிஎக்ஸ் வெடிப்பொருள்? மும்பை டூ கோவா போகுதாம்! ஒரு போனால் டென்ஷன்!
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மும்பை: மும்பையில் இருந்து கோவாவுக்கு லாரியில் ஆர்டிஎக்ஸ் வெடிப்பொருட்கள் ஏற்றி கொண்டு 2 பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் செல்வதாக வந்த தகவலால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனால் 2 மாநிலங்களும் உஷார்ப்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதுபற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் தொழில் ரீதியாக மகாராஷ்டிரா முக்கிய மாநிலமாக உள்ளது. அதேபோல் கோவாவுக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடு சுற்றுலா பயணிகளும் அதிகமாக வந்து செல்கின்றனர். இதனால் கோவா சுற்றுலாவுக்கு சிறந்த இடமாக உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றுள்ளது.

இந்நிலையில் தான் இன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் உள்ள போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று ஒருவர் போன் செய்து பேசினார். அப்போது அந்த நபர் கூறிய தகவல் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டு அறையையும் பதற்றமடைய செய்தது.

அதாவது அந்த நபர், ‛‛மும்பையில் இருந்து கோவாவுக்கு வெள்ளை நிறத்தில் லாரி செல்கிறது. அந்த லாரியில் ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து உள்ளது. இதனை 2 பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் கொண்டு செல்கின்றனர்” எனக்கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். இதனால் போலீஸ் கட்டுப்பாட்டு அறை பரபரப்பாகி போனது. உடனடியாக மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத ஒழிப்பு படைக்கும், கோவா போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெள்ளை நிற லாரி மட்டுமின்றி சந்தேகத்துக்குரிய அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது போனில் பேசிய நபர் தனது பெயரை பாண்டே என தெரிவித்துள்ளார். மேலும் அவர் எங்கு உள்ளார்? அவரது பின்னணி என்ன ? என்பது தெரியவில்லை. அதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மணிப்பூரில் நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்கள்.. முக்கிய குற்றவாளியை தட்டித்தூக்கிய போலீஸ்! யார் இவர்? முன்னதாக கடந்த 13ம் தேதி ஒருவர் மும்பை போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து 26/11 தாக்குதலைப் போன்ற தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்தார்.

பாகிஸ்தானில் இருந்து பப்ஜி மூலம் பழக்கமான சீமா ஹைதர் என்ற பெயர் நொய்டாவில் உள்ள நபருடன் சேர்ந்து வாழ்கிறார். அவரை நாட்டுக்கு அனுப்பி வைக்காவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அதற்கு முன்பாக கடந்த 12ம் தேதியும் இதேபோல் சீமா ஹைதர் விவகாரத்தில் மிரட்டல் போன்கால் சென்றிருந்தது. இத்தகைய சூழலில் தான் தற்போது ஒரு வாரத்துக்குள் 3வது முறையாக போன்கால் வந்துள்ளது. மேலும் முதல் 2 போன்காலில் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் ஆர்டிஎக்ஸ் வெடிப்பொருட்களுடன் மும்பையில் இருந்து கோவா செல்வதாக தெரிவித்துள்ளனர். இதனால் போலீசார் அலர்ட் ஆகி வாகன சோதனை மற்றும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

மணிப்பூர் முதல்வரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி விசிக சார்பில் மதுரையில் நாளை ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்

Next Post

காதலித்து திருமணம் செய்ய மறுத்தவரை 20 ஆண்டுகளுக்கு பின் அரிவாளால் வெட்டிய பெண் @ கமுதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காதலித்து திருமணம் செய்ய மறுத்தவரை 20 ஆண்டுகளுக்கு பின் அரிவாளால் வெட்டிய பெண் @ கமுதி

காதலித்து திருமணம் செய்ய மறுத்தவரை 20 ஆண்டுகளுக்கு பின் அரிவாளால் வெட்டிய பெண் @ கமுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In