Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சென்னையில் வேற லெவலில் உயர்மட்ட மேம்பாலம்! அதுவும் 4 வழிச்சாலை.. பணி எப்போது தொடங்கும்.. இதோ அப்டேட்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 24, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
சென்னையில் வேற லெவலில் உயர்மட்ட மேம்பாலம்! அதுவும் 4 வழிச்சாலை.. பணி எப்போது தொடங்கும்.. இதோ அப்டேட்
12
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னை அண்ணாசாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இதற்கான அரசாணையும் அண்மையில் வெளியான நிலையில், 4 வழிச்சாலையாக அமையும் இந்த மேம்பாலம் கட்டப்படும் பணிகள் எப்போது தொடங்கும் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்த விவரங்களை பார்க்கலாம். சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை.

எந்த சாலைகளை பார்த்தாலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வாகனங்கள் அணி வகுத்து செல்வதை காண முடியும். அதுவும் பீக் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும். சென்னையின் மையப்பகுதி என்று சொல்லக்கூடிய அண்ணா சாலையில் வரிசை கட்டி வாகனங்கள் நிற்கும். அதுவும் தேனாம்பேட்டை சிக்னலை தாண்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் சென்னையின் பிரதான சாலையான அண்ணாசாலையில் மேம்பாலம் கட்டப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் இந்த மாத துவக்கத்தில் வெளியிட்டப்பட்டது.

இந்த நிலையில் தான் இந்த மேம்பாலம் கட்டும் பணி எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி மாதம் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. ரூ. 621 கோடி மதிப்பில் தேனாம்பேட்டை -சைதாபேட்டை இடையே சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு உயர்மட்ட மேம்பாலமாக இது அமைகிறது. வரும் ஜனவரியில் தொடங்கி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த மேம்பாலம் அமைக்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அடியோடு மாறப்போகும் போக்குவரத்து.. சென்னையில் வருகிறது புதிய ராட்சச பாலம்.. என்னென்ன பயன்கள்? இந்த பணிகள் தொடங்கும் போது அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஏற்கனவே மெட்ரோ ரயில் வழித்தடம் அமைந்துள்ள பகுதியிலேயே பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சாலை மட்டத்தில் இருந்து 20 அடி உயரத்தில் நான்கு வழிச்சாலைகளாக இந்த மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அண்ணாசாலையை பொறுத்தவரை சென்னையின் இதயபகுதி என்று சொல்ல்லாம். பல்லவன் சாலை, சுவாமி சிவானந்தா சாலை, வாலாஜா சாலை, பிளாக்கர்ஸ் சாலை, பீட்டர்ஸ் சாலை, பின்னி சாலை, ஸ்பென்சர் பிளாசா, ஒயிட்ஸ் சாலை, கிரீம்ஸ் சாலை, லாயிட்ஸ் சாலை, நுங்கம்பாக்கம் சாலை, தெற்கு உஸ்மான் சாலை, தி.நகர் தாலுகா அலுவலக சாலை, வேளச்சேரி மெயின் ரோடு, சர்தார் படேல் சாலை, கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் அண்ணா சாலையில் சந்திக்கின்றன. சென்னையில் முதல்முறை.. மேம்பால வடிவமைப்பில் மாநகராட்சி சூப்பர் திட்டம்.. அதுவும் திநகரில்! எனவே 24 மணி நேரமும் போக்குவரத்து அதிகம் காணப்படும் பரபரப்பான இந்த சாலையில் அமைய இருக்கும் இந்த மேம்பாலம் வாகன ஓட்டிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும். பாலம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் வாகன ஓட்டிகள் பல நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருக்காது.. இதனால் பயணிகளின் நேரம் கணிசமாக மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணா சாலையில் உயர்மட்ட மேம்பாலாமாக நான்கு வழிச்சாலையாக அமையும் இந்த மேம்பாலம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

Next Post

திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் உதவி காவல் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: பாஜக மாவட்ட நிர்வாகி கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் உதவி காவல் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: பாஜக மாவட்ட நிர்வாகி கைது

திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் உதவி காவல் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: பாஜக மாவட்ட நிர்வாகி கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In