Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

விசா பெற்றுத் தருவதாக கூறி மோசடி: திருப்பூரில் முன்னாள் திமுக பிரமுகர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 27, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
விசா பெற்றுத் தருவதாக கூறி மோசடி: திருப்பூரில் முன்னாள் திமுக பிரமுகர் கைது
6
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருப்பூர்: திருப்பூர் வடக்கு மாவட்ட திமுகவில் ஆதிக்கம் செலுத்திவந்த கே.ராஜ்மோகன் குமார் அண்மையில் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட நிலையில் தற்போது விசா பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக திமுகவினர் கூறும்போது, “திருப்பூரில் கட்சி பெயரை சொல்லிக் கொண்டு ஆதிக்கம் செலுத்தியவர் கே.ராஜ்மோகன் குமார். இவர் மீது போலி பாஸ்போர்ட் வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதே இவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். பின்னர் திரைப்படங்களில் முகம் காட்டியவர், மீண்டும் மெள்ள, மெள்ள கட்சிக்குள் நுழைந்து தன் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை ஆகிய இடங்களில் குப்பை அள்ளும் ஒப்பந்தத்தை எடுத்தார். இதில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார். கட்சித் தலைமை இதனால் கோபப்பட்டு அவரை நிரந்தரமாக நீக்கியது. ஏற்கேனவே தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் நிரந்தர நீக்கப்பட்டது கட்சிக்குள் பலரையும் நிம்மதிகொள்ள வைத்துள்ளது.” என்றனர்.

இந்நிலையில் விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 25 ஆயிரம் பணம் பெற்று, அந்த நபருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ராஜ்மோகன் குமாரை திருப்பூர் வடக்கு போலீஸார் இன்று கைது செய்தனர்.

.

Tags: கதகறதமகதரபபரலதரவதகபரமகரபறறதமசடமனனளவச
Previous Post

ரத்தம் சொட்ட சொட்ட சிறுமி கற்பழிப்பு..! – 8 கிமீ தெருக்களில் ஓடிய சிறுமி, கதவை திறக்காத மக்கள்..!

Next Post

தன் நாய் நடைப்பயிற்சிக்கு டெல்லி மைதானத்தை காலி செய்த ஐஏஎஸ் ஜோடி.. கட்டாய ஓய்வு அளித்தது வீட்டுக்கு அனுப்பியது அரசு.!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தன் நாய் நடைப்பயிற்சிக்கு டெல்லி மைதானத்தை காலி செய்த ஐஏஎஸ் ஜோடி.. கட்டாய ஓய்வு அளித்தது வீட்டுக்கு அனுப்பியது அரசு.!

தன் நாய் நடைப்பயிற்சிக்கு டெல்லி மைதானத்தை காலி செய்த ஐஏஎஸ் ஜோடி.. கட்டாய ஓய்வு அளித்தது வீட்டுக்கு அனுப்பியது அரசு.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In