Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பல கோடி சொத்து அபகரிப்பு: மாமனாரை உள்ளே தள்ளிய மருமகள்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 19, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
மகனுக்கு திருமணமாகவில்லை என போலி சான்று தயாரித்து ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்து அபகரிப்பு: மருமகள் புகாரில் மாமனார் கைது
40
SHARES
65
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்ததாக மருமகள் அளித்த புகாரில் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த பெண் பாரதி (45). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் மனு அளித்தார். அதில், கூறியிருந்ததாவது:

எனது கணவர் விஜயகுமார் பெயரில் பெரவள்ளூரில் ரூ.5 கோடி மதிப்பில் நிலத்துடன் கூடிய வீடு இருந்தது. 2007-ல் நிகழ்ந்த சாலை விபத்தில் கணவர் இறந்துவிட்டார்.

போலி வாரிசு சான்றிதழ்: இந்நிலையில், விஜயகுமாரின் தந்தையும், எனது மாமனாருமான மாதவரத்தில் வசிக்கும் செங்கோடன் (71), மகனான விஜயகுமாருக்கு திருமணமாகவில்லை என கூறி போலியான வாரிசு சான்றிதழ் தயாரித்து, போலியான ஆவணங்கள் பதிவு செய்து அவர் பெயரில் இருந்த நிலத்தை மோசடி செய்து அதன் மூலம் ஆதாயம் அடைந்துள்ளார். எனவே, அவர் மீதும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகாரில் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி, நில மோசடி புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், பாரதி தெரிவித்திருந்த புகார் உண்மை என தெரியவந்தது.

இதையடுத்து, செங்கோடன், அவரது கூட்டாளி கானாத்தூர் லோகநாதன் (51) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

.

Tags: அபகரபபஎனகடகதசததசனறதயரதததரமணமகவலலபகரலபலமகனககமதபபளளமமனரமரமகளர.5
Previous Post

தமிழகம், புதுச்சேரியில் நாளை செல் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை: தமிழக அரசு தகவல்

Next Post

மேல்மருத்துவர் பங்காரு அடிகளார் காலமானார்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மேல்மருத்துவர் பங்காரு அடிகளார் காலமானார்!

மேல்மருத்துவர் பங்காரு அடிகளார் காலமானார்!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    மாமனார் பத்து ரூபாய் கூட செலவு செய்யாத குணம் உள்ளவர் எனவே இவரிடம் எந்த ஒரு உறவினர்களோ நண்பர்களோ கிடையாது எனவே தோல்வி அடைந்து விட்டார் ஆனால் மருமகளிடம் பணம் செலவு செய்யும் மனம் உள்ளது அவரை சுற்றி ஒரு கூட்டத்தை வைத்துள்ளார் எனவே வெற்றி பெற்றுள்ளார் எப்படி சொல்கிறேன் என்றால் இவர்களைப் பற்றி இவர்களைப் பற்றி ஏற்கனவே எனக்கு தெரியும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In