Saturday, September 19, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கழுவி ஊற்றிய EVKS .. அண்ணாமலை பாத யாத்திரை போனால் ராகுல் காந்தி ஆகிவிடுவாரா ?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 21, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
1
கழுவி ஊற்றிய EVKS .. அண்ணாமலை பாத யாத்திரை போனால் ராகுல் காந்தி ஆகிவிடுவாரா ?
25
SHARES
41
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: அண்ணாமலை சிவாஜியை விட மிகப்பெரிய நடிகர். பாத யாத்திரை போனால் தானும் ராகுல் காந்தி ஆகிவிடலாம் என நினைக்கிறார். நடைபயணத்தை நிறைவு செய்யும் வரை அண்ணாமலை தலைவர் பதவியில் நீடிப்பாரா என்பதும் சந்தேகம் தான் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி: பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “நான் முதன் முதலில் சட்டமன்ற உறுப்பினராக வருவதற்கு காரணம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். என் மீது மிகுந்த பாசமும் அன்பும் வைத்திருந்தவர் எனது ஆருயிர் அண்ணன் சிவாஜி கணேசன். அவருக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டவன.

நூறாண்டுகள் கடந்தாலும் அவருடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும்” என தெரிவித்தார். தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைபயணம் தொடங்க இருப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், “அண்ணாமலை சிவாஜியை விட மிகப்பெரிய நடிகர். பாத யாத்திரை போனால் தானும் ஒரு ராகுல் காந்தி ஆகிவிடலாம் என நினைக்கிறார். இவர் ஒருபோதும் ராகுல் ஆக முடியாது. அதுமட்டுமின்றி பாத யாத்திரையை நிறைவு செய்யும் வரை தலைவர் பதவியில் நீடிப்பாரா என்பதும் சந்தேகம் தான். அண்ணாமலையின் ஃபைல்ஸ் ஃபெயில் தான்: தமிழ்நாட்டில் என்றுமே பாரதிய ஜனதாவுக்கு இடமில்லை. திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அண்ணாமலை குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அவர் கூறும் எந்த குற்றச்சாட்டையும் கோர்ட்டில் நிரூபிக்க முடியாது. அண்ணாமலை வெளியிடும் DMK Files எல்லாமே பெயில் ஆகும்” என்றார்.

பாஜக உடனான கூட்டணியில் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், “பழனிசாமிக்கு 32 பற்கள் இருக்கிறது என்பதை அப்போது தான் பார்த்தேன். சிரிக்க ஆரம்பித்தவர் வாயை மூடவில்லை. கடைசி நேரத்தில் மோடி உடன் கைகோர்த்துள்ளார். மோடிக்கு ஏற்படும் முடிவு தான் அவருக்கு ஏற்படும்” என்றார். அமலாக்கத்துறை திரும்பும்: தொடர்ந்து பேசிய அவர், “அமலாக்கத்துறை பிரதமர் மோடியின் கைப்பாவையாக இருக்கிறது.

யாரெல்லாம் செல்வாக்கு பெற்ற நபர்களாக இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் மிரட்ட அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறார். ஒரு விஷயத்தை மோடி மறந்துவிடக் கூடாது. ஒருநாள் மோடி மீது அமலாக்கத்துறை திரும்பும். ஏனெனில் அவர் மீது பல கிரிமினல் குற்ற வழக்குகள் இருக்கின்றன. குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மகன் 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தார்? தற்போது எப்படி இருக்கிறார்? என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அதானிக்கே சவால் விடும் வகையில் அமித் ஷா மகன் உருவெடுத்துள்ளார். இதென்ன நல்ல வழியில் சம்பாதித்த பணமா?” எனக் கேள்வி எழுப்பினார். வாசனுக்கு கொஞ்சம் மனசாட்சி இருக்கு.. அவரே அவருக்கு ஓட்டு போட மாட்டார்.. கலாய்த்த இளங்கோவன்!

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

கனிமொழி எம்‌.பி. – மணிப்பூர் கலவரங்களை தடுக்க தவறிய ஒன்றிய பாஜக அரசு மற்றும்‌ மணிப்பூர்‌ மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Next Post

வருமான வரித் துறையினர் மீது தாக்குதல்: 15 திமுகவினரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வருமான வரித் துறையினர் மீது தாக்குதல்: 15 திமுகவினரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

வருமான வரித் துறையினர் மீது தாக்குதல்: 15 திமுகவினரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    ராகுல் காந்தியும் பாதயாத்திரை சென்றார் அப்போ அவரு மகாத்மா காந்தி ஆகிய விடுவாரா

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In