Chennai oi-Vigneshkumar
Published: Tuesday, July 11, 2023, 19:52 [IST]
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோரை மீண்டும் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிமுக கடந்தாண்டு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் என இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது. அப்போது இரு தரப்பும் தாங்கள் தான் ரியல் அதிமுக என்றே தொடர்ந்து கூறிக் கொண்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட இரு தரப்பும் அதிமுக சார்பில் வேட்பாளர்களை அறிவித்தது. இருப்பினும், அதன் பிறகு ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரைத் திரும்பப் பெற்றுக் கொண்டது எல்லாம் தனிக்கதை. அதன் பிறகு நடந்த பல சம்பவங்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வரக் காரணமாக இருந்தது. நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராகவும் தேர்வு பொறுப்பேற்றார். இதற்கிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோரை மீண்டும் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 5 அதிமுக மாஜிக்கள் மீது ஊழல் புகார்.. ஆளுநர் கையெழுத்திடுவது எடப்பாடி கையில்!.. பாஜக நெருக்கடி தவறை உணர்ந்து மீண்டும் அதிமுகவில் சேர மன்னிப்பு கடிதம் தர வேண்டும் என்றும் கட்சி பொதுச்செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
Edappadi Palaniswami about taking back Expelled members back in AIADMK: Edappadi Palaniswami latest news in tamil.
Story first published: Tuesday, July 11, 2023, 19:52 [IST]

