Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பழங்குடியினச் சமூகத்தில் பிறப்பது ஒரு தடையல்ல!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 25, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
Droupadi Murmu : "பழங்குடியினச் சமூகத்தில் பிறப்பது ஒரு தடையல்ல!"- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஜார்கண்ட் மாநிலம், குந்தியில் மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்திருந்த பெண்கள் மாநாட்டில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நம் நாட்டில் பெண்களின் பங்களிப்புக்கு எண்ணற்ற எழுச்சியூட்டும் எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. சமூக சீர்திருத்தம், அரசியல், பொருளாதாரம், கல்வி, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி, வணிகம், விளையாட்டு, ராணுவம் உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கியிருக்கின்றனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

எந்தவொரு துறையிலும் வெற்றி பெறுவதற்கு, அவர்களின் திறமையை அங்கீகரிப்பது இன்றியமையாதது. பெண்களை வலுவூட்ட பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் சமூக மற்றும் பொருளாதார அம்சங்கள் இரண்டும் இணையாக முக்கியமானவை. ஜார்கண்ட் மாநிலத்தின் கடின உழைப்பாளி சகோதரிகள், மகள்கள் அனைவரும் மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க வல்லவர்கள். உங்கள் திறமையை உணர்ந்து தன்னம்பிக்கையுடன் முன்னேறுங்கள்.

ஜார்கண்டின் கிராமப்புற பொருளாதாரத்துக்குப் பெண்களின் சக்தி ஆற்றலை வழங்குகிறது. எனவே, ஜார்க்கண்டிலுள்ள சுயஉதவிக் குழுக்களுடன் அதிகமான பெண்களை இணைத்து அவர்களின் திறன் மேம்பாட்டின் மூலம் வேலைவாய்ப்பை வழங்குவது அவசியம். இந்த மாநாட்டின் மூலம், பெண்கள் தங்கள் உரிமைகள் மற்றும் அவர்களின் நலனுக்காக அரசு நடத்தும் பல்வேறு திட்டங்கள் குறித்து அதிக விழிப்புணர்வு பெறுவார்கள்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

பெண்ணாக இருப்பதோ அல்லது பழங்குடியின சமூகத்தில் பிறப்பதோ ஒரு தடையல்லா. பழங்குடி சமூகம் பல துறைகளில் சிறந்த உதாரணங்களை முன்வைக்கிறது. அவற்றில் ஒன்று பழங்குடி சமூகத்தில் வரதட்சணை முறை இல்லாதது ஆனால், நம் சமூகத்தில் உள்ள பலர், நன்கு படித்தவர்கள். ஆனாலும், இன்றுவரை வரதட்சணை முறையை படித்தவர்கைவிட முடியவில்லை ” எனத் தெரிவித்திருக்கிறார்.

.

Tags: abarrierbeingborncommunitydraupadiDroupadiinisMurmunotpresidenttribal
Previous Post

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவிற்கு சாவர்க்கரின் பிறந்த தேதியை தேர்வு செய்ததில் ஆச்சரியமில்லை. அது எதிர்பார்த்ததுதான் – துஷார் காந்தி

Next Post

இந்தியாவில் உண்மையைச் சொல்வது குற்றமாகும்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியாவில் உண்மையைச் சொல்வது குற்றமாகும்.

இந்தியாவில் உண்மையைச் சொல்வது குற்றமாகும்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In