Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அந்த 4 ஏக்கர் நிலம்.. தாம்பரம் போலீஸ் கமிஷ்னர் ஆபிஸ் எங்கு வருது தெரியுமா? ஹைகோர்ட் அனுமதி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 26, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அந்த 4 ஏக்கர் நிலம்.. தாம்பரம் போலீஸ் கமிஷ்னர் ஆபிஸ் எங்கு வருது தெரியுமா? ஹைகோர்ட் அனுமதி
19
SHARES
31
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: தாம்பரத்தில் தனியார் கல்வி நிறுவனத்திடம் இருந்து மீட்கப்பட்ட 4 ஏக்கர் நிலத்தில் புதிய காவல் ஆணையர் அலுவலக கட்டிடம் கட்டுமான பணியை தொடங்கி, விரைந்து முடிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த 1944 ஆம் ஆண்டு சென்னை தாம்பரத்தில் 9 ஏக்கர் 77 செண்ட் நிலத்தை பல்வேறு நிபந்தனைகளுடன் ‘வள்ளுவர் குருகுலம்’ என்ற கல்வி நிறுவனத்துக்கு அரசு ஒதுக்கியது. இதில் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் மீதமுள்ள 4 ஏக்கர் 77 செண்ட் நிலம் இது வரை பயன்படுத்தப்படாமலேயே இருந்து வருகிறது. பயன்படுத்தப்படாமல் உள்ள நிலத்தில் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் கட்ட முடிவெடுத்த அரசு அந்த நிலத்தை மீட்டெடுத்தது. இந்நிலையில், அரசு ஒதுக்கிய 9.77 ஏக்கர் நிலத்திற்கும் பட்டா வழங்க உத்தரவிடக்கோரி ‘வள்ளுவர் குருகுலம்’ கல்வி நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கல்வி பயன்பாட்டுக்காக அரசு ஒதுக்கிய நிலத்தின் எதிரே தனியார் நிலத்தை வாங்கிய இந்த கல்வி நிறுவனம், அந்த இடத்தை நர்சிங் கல்லூரி, பெட்ரோல் பங்க், உணவகங்கள் உட்பட பல தனி நபர்களுக்கு வாடகை விட்டு பெரிய அளவில் வருமானம் ஈட்டு வருவதால், அரசு ஒதுக்கிய நிலத்துக்கு பட்டா வழங்க கூடாது என அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் தெரிவித்தார் நெல்லை எம்பி ஞானதிரவியம் மகனால் 4 ஏக்கர் நிலம் அபேஸ்? கலெக்டர் கார் முன்பாக அழுதபடி மூதாட்டி தர்ணா இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அரசு விதித்த நிபந்தனைகளை கல்வி நிறுவனம் மீறியதுடன், நிலத்தை பயன்படுத்தப்படாமல் உள்ளதால் நிலத்துக்கு பட்டா வழங்கும்படி உத்தரவிட முடியாது என மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும், தாம்பரம் காவல் ஆணையர் அலுவலக கட்டிடத்துக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிலத்தில், ஆணையர் அலுவலக கட்டுமான பணிகளை துவங்கி விரைந்து முடிக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டார். தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் தற்போது எங்கு உள்ளது ? தற்போது தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தின் கீழ் செயல்பட்டு வந்த தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பள்ளிக்கரணை, சேலையூர்,சிட்லப்பாக்கம், பீர்க்கன்கரணை, குன்றத்தூர், கானாத்தூர், சங்கர்நகர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி,கண்ணகி நகர் உள்ளிட்ட 13 காவல் நிலையங்களுடன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 2 காவல் நிலையங்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 5 காவல் நிலையங்கள் ஆகியவை இணைக்கப்பட்டு தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் இயங்கி வருகின்றன.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

திருப்பத்தூர் | புதைக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு பிறகு சிசுவின் உடல் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

Next Post

கூட்டுறவுத் துறை ஊழியர்கள் ஒருநாள் விடுப்புப் போராட்டம் – மதுரையில் வெறிச்சோடிய அலுவலகங்கள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கூட்டுறவுத் துறை ஊழியர்கள் ஒருநாள் விடுப்புப் போராட்டம் - மதுரையில் வெறிச்சோடிய அலுவலகங்கள்

கூட்டுறவுத் துறை ஊழியர்கள் ஒருநாள் விடுப்புப் போராட்டம் - மதுரையில் வெறிச்சோடிய அலுவலகங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In