Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 4.. கடைசி நேரத்தில் மாறிய டைட்டில் வின்னர்.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 31, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
குக் வித் கோமாளி சீசன் 4.. கடைசி நேரத்தில் மாறிய டைட்டில் வின்னர்.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..?
76
SHARES
123
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இன்று இறுதி நாளுக்கான நிகழ்ச்சி நடந்து முடிவடைந்து இருக்கிறது.

இன்றைய நிகழ்ச்சி 5:00 மணி நேரம் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வந்தது. அதில் டைட்டில் வின்னர் ஆக மைம் கோபி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதே நேரத்தில் அவருக்கான பரிசுத்தொகை பற்றிய விவரங்களும் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக ரியாலிட்டி ஷோக்களில் அதிகமான ரசிகர்களின் நன்மதிப்பை பெற்ற ரியாலிட்டி ஷோவாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு காரணமாகத்தான் தற்போது நான்காவது சீசன் வரைக்கும் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக வந்திருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் குக்குகளும்,கோமாளிகளும் செய்யும் லூட்டிகள் மற்றும் அவர்களை பாடாய்ப்படுத்தும் நடுவர்கள் என அனைவரும் கலகலப்பாக கொண்டு சென்று கொண்டு இருப்பதால் சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் இது ஜாலியாக இருப்பதாகவும் இதுதான் ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருக்கிறது என்றும் பலர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். எப்போதும் காமெடிக்கு அதிகமா வரவேற்பு இருக்க தான் செய்கிறது.

அந்த மாதிரி தான் டைமிங் காமெடி ஆக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகள் செய்யும் சேட்டைகள் ரசிகர்களால் தொடர்ச்சியாக ரசிக்கப்பட்டு வருவதால் தான் அதிகமான டிஆர்பியும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பைனல் நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் யார் டைட்டில் வின்னர் ஆக வருவார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், இன்று பைனல் நிகழ்ச்சி 5 மணி நேரமாக ஒளிபரப்பாகி வந்தது. அதில் டைட்டில் வின்னராக மைம் கோபி வெற்றி பெற்றிருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடம் ஸ்ருஷ்டிக்கும் மூன்றாவது இடம் விசித்திராவிற்கும் கிடைத்து இருக்கிறது. அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக நான்காவது சீசனில் தான் ஆண் போட்டியாளர் வெற்றி பெற்று இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரைக்கும் பெண் போட்டியாளர்கள் மட்டும்தான் வின்னராக தொடந்து கொண்டு இருக்கின்றனர். அதுபோல வின்னராக செலக்ட் ஆன மைம் கோபிக்கு விஜய் டிவி பிரபலங்கள் மட்டுமல்லாமல் பல திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

அதுபோல அதிகமான ரசிகர்கள் மைம் கோபியின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் என்று வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து மைம் கோபிக்கு திரைப்படங்களிலும் அதிகமாக வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பலர் தங்களுடைய ஆசையை தெரிவித்து வருகிறார்கள். CWCயில் நடப்பது இதுதான்.. முதல் முறையாக உருக்கமாக ஸ்ருஷ்டி.. அவங்க 2 பேரு தான் காரணமாம்..! அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவருக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசு என்றும் இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசு என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் வெற்றி பெற்ற கோப்பை மற்றும் பதக்கங்களோடு மைம் கோபி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,” ஜெயிச்சிட்டோம் தம்பிகளா, சப்போர்ட் பண்ண எல்லோருக்கும் நன்றிகள்” என்று புகைப்படம் வெளியிட்டு கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: ஓரிரு இடங்களில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்

Next Post

திருச்சியில் தண்டவாள சீரமைப்பு பணி: 20+ ரயில்கள் 5 மணி நேரம் தாமதம் என தகவல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருச்சியில் தண்டவாள சீரமைப்பு பணி: 20+ ரயில்கள் 5 மணி நேரம் தாமதம் என தகவல்

திருச்சியில் தண்டவாள சீரமைப்பு பணி: 20+ ரயில்கள் 5 மணி நேரம் தாமதம் என தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In