Saturday, September 19, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அபாயம்! இந்த ஜூலை தான் உலகின் மிக வெப்பமான மாதம்.. “இதை விட ஒரு பயங்கரம்” – நாசா விஞ்ஞானி வார்னிங்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 21, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
அபாயம்! இந்த ஜூலை தான் உலகின் மிக வெப்பமான மாதம்.. “இதை விட ஒரு பயங்கரம்” – நாசா விஞ்ஞானி வார்னிங்!
27
SHARES
43
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

வாஷிங்டன்: இந்த ஜூலை மாதம் தான் நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் உலகின் மிக அதிக வெப்பமான மாதமாக இருக்கும் என்று நாசாவின் முக்கியமான காலநிலை நிபுணர் கவின் ஷ்மிட் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு அலெர்ட் மெசேஜையும் கொடுத்துள்ளார் அவர். உலகின் பெரும்பாலான பகுதிகளில் எல் நினோ தாக்கத்தால் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் உலகில் அதிக வெப்பம் பதிவான மாதமாக இந்த ஜூலை மாதம் தான் இருக்கும் என நாசா காலநிலை விஞ்ஞானி கவின் ஷ்மிட் தெரிவித்துள்ளார். மேலும், 2024ஆம் ஆண்டு இதைவிட உச்சங்களை எட்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். உலகின் சராசரி வெப்பநிலையை 16 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஜூலை 3ஆம் தேதி உலகின் சராசரி வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு அதிகரித்தது. அந்த நாள் உலகின் மிக அதிக வெப்பம் தகித்த நாளாக பதிவானது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 16.92 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவாகியிருந்தது.

அதுதான் உலகின் மிக அதிக வெப்பநிலையாக பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதை மிஞ்சும் வகையில் ஜூலை 3-ஆம் தேதி 17.01 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலை பதிவானது. தொடர்ந்து ஜூலை 4 ஆம் தேதி 17.18 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. அடுத்து ஜூலை 6 ஆம் தேதி 17.23 டிகிரி செல்சியஸ் ஆக வெப்பநிலை பதிவானது. இப்படி ஜூலை மாதத்தில் உலகின் வெப்பநிலை புதிய உச்சங்களை எட்டியது.

இந்த ஆண்டு கோடைகாலம் தொடங்கியது முதலே வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. இதனால் தமிழ்நாட்டிலும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு கூட தாமதமாக தொடங்கியது. கடுமையான வெப்பத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டில் வரலாறு காணாத அளவு வெப்பநிலை அதிகரித்துள்ளதாக நாசாவே தகவல் வெளியிட்டுள்ளது.

நாசாவின் வாஷிங்டன் தலைமையகத்தில் நாசா நிர்வாகி பில் நெல்சன் மற்றும் தலைமை விஞ்ஞானயும் மூத்த காலநிலை ஆலோசகர் கேட் கால்வின் உள்ளிட்ட காலநிலை நிபுணர்கள் மற்றும் பிற தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மூத்த காலநிலை விஞ்ஞானி கவின் ஷ்மிட் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார். எல் நினோ ஒரு சிறிய பங்கு வகித்தாலும், நாம் பார்ப்பது ஒட்டுமொத்த வெப்பத்தையே, எல்லா இடங்களிலும், குறிப்பாக கடல்களின் வெப்பம் வெகுவாக அதிகரித்துள்ளது.

பல மாதங்களாக, வெப்பமண்டலத்திற்கு வெளியேயும் கூட, கடல் மேற்பரப்பு வெப்பநிலை முந்தைய ரெக்கார்டுகளை முறியடித்து வருகிறது என கவின் ஷ்மிட் தெரிவித்துள்ளார். 2023 ஜூலை மாதம் தான் மிக அதிக வெப்பமான மாதமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன எனத் தெரிவித்துள்ள ஷ்மிட், தற்போது தனது கணக்கீடுகளின் அடிப்படையில் இதற்கு 50-50 வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். மற்ற காலநிலை விஞ்ஞானிகள் இதற்கு 80 சதவிகிதம் வரை வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு 2023 ஐ விட அதிக வெப்பமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.

ஏனெனில் எல் நினோ வானிலை முறை – உலகளாவிய வெப்பநிலையை அதிகரிக்கும் போக்குக்கு பெயர் பெற்றது. இந்த ஆண்டின் இறுதியில் வெப்பநிலை உச்சத்தை எட்டும் என்றும் ஷ்மிட் தெரிவித்துள்ளார்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

சென்னை | மதுபோதை வாகன ஓட்டியிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்ட 2 போலீஸார் சஸ்பெண்ட்

Next Post

அரசு மருத்துவமனைகளில் கழிப்பறை, சமையலறையை சுத்தமாக பராமரிக்க வேண்டும் – சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அரசு மருத்துவமனைகளில் கழிப்பறை, சமையலறையை சுத்தமாக பராமரிக்க வேண்டும் - சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் கழிப்பறை, சமையலறையை சுத்தமாக பராமரிக்க வேண்டும் - சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In