Saturday, October 31, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சாலை விபத்தில் பலியான குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 15, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ராமநாதபுரம் சாலை விபத்தில் பலியான இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு
8
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: ராமநாதபுரம் சாலைவிபத்தில் உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம் மற்றும் உள்வட்டம், மாயாகுளம் பகுதியில் திங்கள்கிழமை (14-8-2023) மதியம் அரசு பேருந்தும், தனியார் வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து நிலைதடுமாறி சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்தில் இருந்த இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அரசு போக்குவரத்து கழக சொகுசு பேருந்து ஒன்று கிழக்கு கடற்கரை சாலை வழியாக திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தது. அப்போது, கீழக்கரை பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே பேருந்து வந்தபோது, எதிர்பாராத விதமாக லாரி ஒன்று குறுக்கிட்டுள்ளது. இதனால், பேருந்து ஓட்டுநர் பேருந்தை திருப்ப முயன்றபோது, அது கட்டுப்பாட்டை இழந்து, அந்த பகுதியில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது மோதியது. மேலும், அருகே இருந்த சுவரை உடைத்துக்கொண்டு சாலை ஓரம் இருந்த பனை மரத்தின் மீது மோதி நின்றது. இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

.

Tags: அறவபபஇரவரனகடமபததககசலதலநவரணமபலயனமதலவரர.2ரமநதபரமலடசமவபததல
Previous Post

மலை உச்சியில் செல்ஃபி எடுக்க முயன்று கீழே விழுந்த தொழிலாளி: மூன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு

Next Post

சாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழகத்தில் சாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்

சாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In