Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மலை உச்சியில் செல்ஃபி எடுக்க முயன்று கீழே விழுந்த தொழிலாளி: மூன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 15, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
கிருஷ்ணகிரி | மலை உச்சியில் செல்ஃபி எடுக்க முயன்று கீழே விழுந்த வடமாநில தொழிலாளி: மூன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு
60
SHARES
97
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மலை உச்சியில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்ற வடமாநில தொழிலாளி தவறி 30 அடி பள்ளத்தில் கீழே விழுந்தார். மூன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

உத்தரபிரதேச மாநிலம் சுந்தர்வால் பார்சேகிரி காலா பகுதியை சேர்ந்தவர் அமித்குமார்(25). இவர் கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் உள்ள மரக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் திங்கள்கிழமை மாலை காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயிலுக்கு சென்றார். பின்னர் கோயிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சிக்கு சென்ற அவர் செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி அவர், 30 அடி பள்ளத்தில் கீழே விழுந்தார்.

இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதோடு அவரது செல்போனும் உடைந்தது. கோயிலுக்கு சென்ற அமித்குமார், நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது நண்பர்கள் கோயில் மற்றும் மலையின் மீது சென்று தேடினர். விடிய, விடிய மலையின் மீது தேடிய போது, செவ்வாய்க்கிழமை அதிகாலை மலையின் கீழே உள்ள பள்ளத்தில் அவர் சிக்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர்,அவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் வீரர்கள் சற்குணம், ராஜி, இளவரசன், மன்சூர் அகமத், அன்பு, நவீன்குமார் ஆகியோர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியில் இருந்து மீட்பு பணியை தொடங்கினர். சுமார் 3.30 மணி நேரம் போராடி காலை 6.30 மணி அளவில் மலையின் 30 அடி ஆழத்தில் செங்குத்தான பகுதியில் விழுந்து கிடந்த அமித்குமாரை உயிருடன் மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஸ்ட்ரக்சரில் அவரை கட்டி தீயணைப்பு வீரர்கள் மீட்டு கீழே கொண்டு வந்தனர். பின்னர், சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

.

Tags: உசசயலஎடகககரஷணகரகழசலஃபதழலளநரபரடடததககபபனமடபமணமயனறமலமனறரவடமநலவழநத
Previous Post

கர்நாடக அமைச்சர் சிவக்குமாருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

Next Post

சாலை விபத்தில் பலியான குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராமநாதபுரம் சாலை விபத்தில் பலியான இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

சாலை விபத்தில் பலியான குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    இவன்லாம் செல்பி எடுத்து என்ன கிழிக்க போறான் இவனை எதுக்கு காப்பாத்தணும் இவனை அப்படியே விட்டுட்டு இருக்கலாம் வெத்து வெட்டு

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In