சென்னை சென்ட்ரலிலிருந்து ஆந்திர மாநிலம் பித்ரகுண்டா செல்லும் விரைவு ரயில், பராமரிப்புப் பணி காரணமாக திங்கள்கிழமை (ஜூலை 10) முதல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஆந்திர மாநிலம் பித்ரகுண்டாவிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும் விரைவு ரயில் (எண்: 17237) மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு பித்ரகுண்டா செல்லும் விரைவு ரயில் (எண்: 17238) ஆகியவை திங்கள்கிழமை (ஜூலை 10) முதல் ஜூலை 14 -ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாதை மாற்றம்: ஜாா்கண்ட் மாநிலம் ஹாட்டியாவிலிருந்து காட்பாடி, ஜோலாா்பேட்டை வழியாக ஜூலை 11, 15 ஆகிய தேதிகளில் பெங்களூரு செல்லும் விரைவு ரயில்கள் (எண்கள்: 12835, 18637) ஆந்திர மாநிலம் நிடடவோலே, பீமாவரம் நகரம், குடிவாடா மற்றும் விஜயவாடா வழியாக இயக்கப்படும்.
அதேபோல், ஜாா்க்கண்ட் மாநிலம் டாடாநகரிலிருந்து காட்பாடி, ஜோலாா்பேட்டை வழியாக பெங்களூரு செல்லும் விரைவு ரயில் (எண்: 12889) நிடடவோலு, பீமாவரம் நகரம், குடிவாடா மற்றும் விஜயவாடா வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

