Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மமதா பானர்ஜி கோட்டையில் இருந்து முதல் ராஜ்யசபா எம்பி.. கணக்கை தொடங்கும் பாஜக!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 24, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
மமதா பானர்ஜி கோட்டையில் இருந்து முதல் ராஜ்யசபா எம்பி.. கணக்கை தொடங்கும் பாஜக!
24
SHARES
39
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

டெல்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரைன் உள்ளிட்ட 11 பேர் போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.க்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். கோவா, குஜராத் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் 11 ராஜ்யசபா எம்.பிக்கள் பதவி காலம் முடிவடைந்தது.

இதனையடுத்து 11 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு போட்டிகள் இருந்தால் ஜூலை 24-ல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. போட்டியின்றி தேர்வு: இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸின் 6 பேரும் பாஜகவின் 5 பேரும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இவர்களில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், குஜராத் மாநிலத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.

ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 13-ந் தேதி முடிவடைந்தது. இந்த 11 பேரை எதிர்த்து யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. இதனால் 11 பேரும் போட்டியின்றி தேர்வாவது உறுதியானது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது. மே. வங்கம்: மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 7 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 6 இடங்களுக்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸும் 1 இடத்துக்கு பாஜகவும் வேட்புமனுத் தாக்கல் செய்தன. திரிணாமுல் காங்கிரஸின் டெரிக் ஓ பிரைன் உட்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர். அதேபோல பாஜகவின் அனந்த் ராய் மகாராஜாவும் போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாகிறார்.

மமதா பானர்ஜியின் கோட்டையான மேற்கு வங்க மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான பாஜக தமது முதல் ராஜ்யசபா எம்.பி. பதவியை இதன் மூலம் பெற்று புதிய சரித்திரம் படைத்திருக்கிறது. கோவா: கோவா மாநிலத்தில் பாஜக மாநில தலைவர் சதானந்த் ஷெட் தனவாதே ராஜ்யசபா எம்.பி.யாகிறார். குஜராத்: குஜராத் மாநிலத்தில் மொத்தம் 3 ராஜ்யசபா எம்பி பதவி இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், குஜராத்தில் இருந்து 2-வது முறையாக ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாகிறார்.

ராஜ்யசபா தற்போதைய பலம்: ராஜ்யசபாவில் மொத்த எம்.பிக்கள் எண்ணிக்கை 245. 7 இடங்கள் காலியாக உள்ளன. தற்போதைய எம்.பிக்கள் எண்ணிக்கை 238. பாஜகவுக்கு 92, காங்கிரஸ் கட்சிக்கு 31, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 12, திமுக, ஆம் ஆத்மி கட்சிகளுக்கு தலா 10 எம்.பிக்கள் ராஜ்யசபாவில் உள்ளனர். பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 9 ராஜ்யசபா எம்.பி.க்கள் சபையில் உள்ளனர்.

ராஜ்யசபா எண்ணிக்கை மாற்றம்: தற்போதைய தேர்தலில் ராஜ்யசபாவில் பாஜகவுக்கு 1 இடம் கூடுதலாக கிடைக்கும். இதன் மூலம் ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் 93 ஆக அதிகரிக்கும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மொத்த ராஜ்யசபா எம்.பி.க்கள் எண்ணிக்கை 105 ஆகவும் உயரும். காங்கிரஸ் எண்ணிக்கை 30 ஆகவும் குறையும்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

தமிழகத்தில் 100% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும- ராமதாஸ்

Next Post

சிவகாசியில் ஒரு டன் குட்கா பறிமுதல்: பெங்களூருவை சேர்ந்த 5 பேர் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சிவகாசியில் ஒரு டன் குட்கா பறிமுதல்: பெங்களூருவை சேர்ந்த 5 பேர் கைது

சிவகாசியில் ஒரு டன் குட்கா பறிமுதல்: பெங்களூருவை சேர்ந்த 5 பேர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In