Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ரூ.10 கூடுதலாக வசூல்! புகார் சொன்னவரை டாஸ்மாக்கில் கும்மியெடுத்த ஏஎஸ்ஐ இடமாற்றம்! பறந்த நோட்டீஸ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 13, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
ரூ.10 கூடுதலாக வசூல்! புகார் சொன்னவரை டாஸ்மாக்கில் கும்மியெடுத்த ஏஎஸ்ஐ இடமாற்றம்! பறந்த நோட்டீஸ்
51
SHARES
82
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் டாஸ்மாக்கில் ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக புகார் சொன்ன நபரை உதவி காவல் ஆய்வாளர் சரமாரியாக தாக்கினார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில் உதவி காவல் ஆய்வாளர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் விளக்கம் கேட்டும் நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இதனை தடுக்க மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். மேலும் விற்பனையாளர்கள் பாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்க கூடாது. நிர்ணயிக்கப்பட்ட விலையில் தான் மதுபானம் விற்பனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

இருப்பினும் பல கடைகளில் இன்னும் கூட கூடுதல் விற்பனைக்கு தான் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் செங்கல்பட்டு நகரம் வேதாச்சலம் நகரில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக மதுபிரியர் ஒருவர் குற்றம்சாட்டினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் டாஸ்மாக் கடை முன்பு நின்று ரூ.10 கூடுதலாக வசூலிக்கிறார்கள் எனக்கூறி தனது எதிர்ப்பை பதிவு செய்தார். குட்நியூஸ்.. டாஸ்மாக்கில் கூடுதல் விலையா? இனி பணி நீக்கம் தான்! அமைச்சர் முத்துசாமி அதிரடி இந்த வேளையில் செங்கல்பட்டு நகர போலீஸ் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளர் ராஜா அங்கு வந்தார். அப்போது ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக தெரிவித்த நபரை சரமாரியாக தாக்கி அங்கிருந்து விரட்டினார்.

மேலும் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க நின்றவர்களையும் லத்தியை காட்டி விரட்டினார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் போலீஸ் அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர். அதோடு ரூ.10 கூடுதலாக விற்பனை செய்தால் போலீசார் தாக்குதல் நடத்துவார்களா?, ஒருவர் மீது தாக்குதல் நடத்த போலீசுக்கு யார் உரிமை அளித்தது? என கேள்வி எழுப்பினர். மேலும் பட்டப்பகலில் பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.10 கூடுதலாக விற்பனை செய்யும் டாஸ்மாக் விற்பனையாளரை விட்டுவிட்டு இந்த போலீஸ் மதுபிரியரை தாக்கி அத்துமீறல் செய்துள்ளார் என பலரும் கருத்துகள் தெரிவித்தனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் போலீஸ் அதிகாரியின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த வீடியோ பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில் தான் இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு நகர போலீஸ் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளர் ராஜா அதிரடியாக இன்று பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி ராஜா போலீஸ் நிலையத்தில் இருந்து ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணி இடமாற்றத்துக்கான உத்தரவை எஸ்பி சாய் பிரனீத் பிறப்பித்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என உதவி காவல் ஆய்வாளர் ராஜாவுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

தமிழகத்தில் 6.10 கோடி வாக்காளர்கள்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

Next Post

‘நியோ மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் இயக்குநர், முகவர் மதுரையில் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘நியோ மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் இயக்குநர், முகவர் மதுரையில் கைது

‘நியோ மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் இயக்குநர், முகவர் மதுரையில் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In