சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் வரும் ஆகஸ்ட் 1-ல் போராட்டம் நடைபெறும் என ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தரப்பினர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:- கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 1 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். கோடநாடு விவகாரத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கோடநாடு வழக்கு விசாரணை கிடப்பில் உள்ளது . கோடநாடு வழக்கில் உரிய விசாரணை தேவை. விரிவான விசரணை நடத்தினால்தான் குற்றவாளிகள் யார் என்று தெரியும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

