Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாஜக நிர்வாகிகளை கொத்தோடு திமுகவுக்கு தூக்கிய அன்பில் மகேஷ்! மொத்தம் 100 பேர்! திருச்சியில் ட்விஸ்ட்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 12, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
பாஜக நிர்வாகிகளை கொத்தோடு திமுகவுக்கு தூக்கிய அன்பில் மகேஷ்! மொத்தம் 100 பேர்! திருச்சியில் ட்விஸ்ட்
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Tamilnadu oi-Arsath Kan
Published: Wednesday, July 12, 2023, 12:58 [IST]
திருச்சி: திருச்சியில் பாஜக மாநகர் மாவட்ட வர்த்தகர் அணிச் செயலாளர் லோகநாதன் உட்பட அக்கட்சியை சேர்ந்த 100 பேரை கொத்தோடு திமுகவுக்கு தூக்கியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ். பாஜக மாநில தலைமை மீது அக்கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட வர்த்தக அணி நிர்வாகி லோகநாதன் கடும் அதிருப்தியில் இருந்து வந்த நிலையில் இந்த இணைப்பு படலம் நடந்துள்ளது. பாஜகவிலிருந்து திமுகவில் இணைந்தவர்களை வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ், வாருங்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் கழகம் காப்போம் என பதிவு வெளியிட்டுள்ளார். ‘என் மக்கள் என் நாடு’ என்ற முழக்கத்துடன் இம்மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து சென்னை வரை 168 நாட்களுக்கு அண்ணாமலை நடைபயணம் தொடங்கவுள்ள நிலையில் அக்கட்சியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்திருப்பது பாஜக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. திமுகவில் இணைந்துள்ள லோகநாதன், இன்னும் பலரை பாஜகவிலிருந்து திமுகவுக்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதை அறிந்த அக்கட்சியின் தலைமை அதற்கு முட்டுக்கட்டை போடும் பணிகளை தொடங்கியுள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷின் செல்வாக்கை பொறுத்தவரை திருச்சி தெற்கு மாவட்டத்தை கடந்து ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருவது கவனிக்கத்தக்கது. இதனால் தான் அமைச்சர் நேரு முன்னிலையில் திமுகவில் இணையாமல் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் லோகநாதன் உட்பட பாஜகவினர் திமுகவில் இணைந்துள்ளனர். இதேபோல் அமமுக, அதிமுகவிலிருந்தும் சில முக்கிய பிரமுகர்களை திமுகவில் இணைப்பதற்கான முயற்சிகளை அமைச்சர் அன்பில் ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Trichy BJP District Traders wing Secretary Loganathan and the 100 members joining dmk in before of Minister Anbil mahesh
Story first published: Wednesday, July 12, 2023, 12:58 [IST]

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

ரூ.215 கோடியில் கட்டிடம், 3.30 லட்சம் புத்தகங்கள்… – திறப்பு விழாவுக்கு மதுரை கலைஞர் நூலகம் தயார்!

Next Post

பெங்களூரு இரட்டைக் கொலை: சந்தேக நபர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்த மறைமுகக் குறிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பெங்களூரு இரட்டைக் கொலை: சந்தேக நபர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்த மறைமுகக் குறிப்பு

பெங்களூரு இரட்டைக் கொலை: சந்தேக நபர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்த மறைமுகக் குறிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In