Chennai oi-Vigneshkumar
Published: Thursday, July 13, 2023, 20:39 [IST]
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை டெல்லிக்குக் கிளம்பிய போது நடந்த ஒரு சுவாரசிய சம்பவத்தின் வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. தமிழ்நாடு அரசியலில் இப்போது ஆக்டிவான எதிர்க்கட்சியாக இப்போது பாஜக செயல்பட்டு வருகிறது. பாஜகவை தமிழ்நாட்டில் வளர்க்க அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழ்நாடு அரசியலில் கொள்கை ரீதியாகவும் கூட்டணி ரீதியாகவும் திமுகவும் பாஜகவும் இருக்கிறது.. ஆளும் திமுக அரசை பாஜகவினர் தொடர்ச்சியாக பல்வேறு விஷயங்களிலும் விமர்சித்து வருகிறார். அண்ணாமலை: இந்த சூழலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை டெல்லிக்குக் கிளம்பினார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரெய்டை தொடர்ந்து தமிழ்நாடு அரசியல் களம் இப்போது சூடுபிடித்துள்ள நிலையில், அண்ணாமலையின் இந்த பயணம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அங்கே அவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையைச் சந்தித்துள்ளார். இதில் பல முக்கிய விஷயங்கள் விவரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. முன்னதாக அண்ணாமலை டெல்லிக்குக் கிளம்பும் முன்பு, சென்னை ஏர்போர்ட்டில் நடந்த சுவாரசிய சம்பவத்தின் வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதாவது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை ஏர்போர்ட் வந்தார். அப்போது அங்கே இருந்த பாஜகவினர் அவரை வரவேற்றனர். அப்படியே அவர்களுடன் பேசிக் கொண்டு அண்ணாமலை உள்ளே சென்றார். தயங்கி வந்த நபர்: அப்போது தூரத்தில் இருந்து அண்ணாமலை கவனிக்கும் ஒருவர், அருகில் வருகிறார். அண்ணாமலை வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கவே, இந்த நபர் பின்னால் வந்து நிற்கிறார். மேலும், தயங்கியபடியே அவர் அண்ணாமலை தோள்களில் கையை வைக்கிறார். அவரை பார்த்தவுடன் அண்ணாமலைக்கு ரொம்பவே மகிழ்ச்சி. ஏனென்றால் அவர் தான் அண்ணாமலையின் ஆசிரியர் ஆவார். அப்போது இருவரும் சற்று நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அண்ணாமலை தனது ஆசிரியர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். தனது பழைய மாணவரான அண்ணாமலை திடீரென தனது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதை அவர் எதிர்பார்க்கவில்லை. அவரது முகத்தில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் நம்மால் தெளிவாகவே பார்க்க முடியும். இது தொடர்பான வீடியோ இணையத்தில் இப்போது வேகமாக டிரெண்டாகி வருகிறது. என்னாச்சு? ஆளுநர் ரவி தமிழ்நாடு வந்த சில மணி நேரங்களில்.. அண்ணாமலை திடீரென டெல்லி பயணம் மெகா நடைபயணம்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுக்க மிகப் பெரிய நடைபயணத்தை நடத்த உள்ளார். இந்த நடைபயணம் வரும் ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது. மொத்தம் 168 நாட்கள் தொடரும் இந்த நடைபயணம் அடுத்தாண்டு ஜனவரி 11ஆம் தேதி சென்னையில் நிறைவடைய உள்ளது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், அண்ணாமலை தமிழ்நாடு முழுக்க இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறார். இதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், அண்ணாமலை திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி சமீபத்தில்தான் டெல்லி சென்று இருந்தார். தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், ஆளுநர் டெல்லி சென்றிருந்தார். இந்தச் சூழலில் தான் இன்று அண்ணாமலையும் டெல்லி பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
Annamalai gets blessing from his teacher whom he meet in Chennai airport: Tamilnadu BJP Chief Annamalai sudden delhi trip.
Story first published: Thursday, July 13, 2023, 20:39 [IST]

