புதுக்கோட்டை மச்சுவாடி சாலையில் தஞ்சையிலிருந்து புதுக்கோட்டைக்கு அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று சென்றது. அதில், படியில் தொங்கியபடி இளைஞர்கள் சிலர் பயணம் செய்தனர். அதிவேகேத்துடன் சென்ற தனியார் பேருந்து, முன்னால் சென்ற பள்ளி பேருந்தை வேகமாக கடக்க முயன்றது. அப்போது, பேருந்தின் படியில் தொங்கியவர்கள் மீது அருகே சென்ற பேருந்து உரசியது.
இதில் படியில் தொங்கிய இளைஞர் ஒருவர் கீழே விழுந்ததில், இளைஞரின் முகம், கை, கால்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு, நல்வாய்ப்பாக உயிர் தப்பிய அந்த இளைஞரை ரத்த காயத்துடன் அங்கிருந்த பொதுமக்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

