Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“தனியா இருக்க போரடிக்குது..” போலீசுக்கு எமர்ஜென்சி கால் போட்ட பெண்.. அதுவும் 2,700 முறை..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 17, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
“தனியா இருக்க போரடிக்குது..” போலீசுக்கு எமர்ஜென்சி கால் போட்ட பெண்.. அதுவும் 2,700 முறை..!
18
SHARES
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

டோக்கியோ: பெண் ஒருவர் தீயணைப்பு படையினருக்கு 2700 முறை எமர்ஜென்சி கால் செய்ததைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். தனிமை என்பது எப்போதுமே ரொம்ப கொடியது. தனிமை காரணமாக மனச்சோர்வு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும்.

இந்தியாவில் குடும்ப அமைப்பு வலுவாக இருப்பதால் தனிமையால் ஏற்படும் பிரச்சினை இங்குக் குறைவு. ஆனால், வெளிநாடுகளில் அப்படியில்லை. தனிமையால் ஏற்படும் குற்றங்களும்.. இதனால் ஏற்படும் உளவியல் நோய்களும் அங்கே ரொம்ப அதிகம்.. அப்படி தனிமையில் இருந்த பெண் ஒருவர் செய்த காரியம் நெட்டிசன்களை வாயடைக்க வைத்துவிட்டது.

ஜப்பான்: இந்தச் சம்பவம் ஜப்பான் நாட்டில் நடந்துள்ளது. அங்கே ஜப்பானில் கடந்த 2.9 ஆண்டுகளில் மட்டும் பெண் ஒருவர் போலியான எமர்ஜென்சி கால்களை செய்துள்ளார். அதுவும் ஏதோ ஓரிரு முறை இல்லை… மொத்தம் 2,761 முறை தவறான எமர்ஜென்சி கால்களை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் 51 வயது பெண் ஒருவரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜப்பானின் சிபா மாகாணத்தில் உள்ள மாட்சுடோ நகரில் வசித்து வரும் பெண் ஹிரோகோ ஹடகாமி.. 51 வயதான இந்தப் பெண் வேலை எதுவும் இல்லாமல் இருந்து வருகிறார். உள்ளூர் தீயணைப்புத் துறையைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான எமர்ஜென்சி கால்கள்: கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு அவசரக் காரணங்களைக் கூறி அவர் தனது வீட்டிலிருந்தும் அண்டை வீடுகளில் இருந்தும் பல முறை பலமுறை அழைப்புகளை மேற்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் 2020 முதல் மே 2023 வரை வயிற்று வலி, கால் வலி என பல்வேறு காரணங்களை சொல்லி ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களைக் கேட்டு வரிசையாகக் கால் செய்துள்ளார். இவரது எமர்ஜென்சி காலை தொடர்ந்து அங்கே ஆம்புலன்ஸ்கள் செல்லும். ஆனால் ஒவ்வொரு முறையும் தனக்கு ஆம்புலன்ஸ் தேவையில்லை.. யார் கால் செய்தார்கள் என்றே தெரியவில்லை என்று கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இதுபோல செய்யக் கூடாது என்று போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் அந்த பெண்ணுக்கு பல முறை வார்னிங் கொடுத்துவிட்டனராம். என்ன காரணம்: பல முறை எச்சரிக்கை விடுத்த பின்னரும் அந்த பெண் இப்படி போலி எமர்ஜென்சி கால்கள் செய்வதை நிறுத்தவே இல்லை. நிலைமை எல்லை மீறிப் போகவே இது தொடர்பாகத் தீயணைப்புத் துறையினர் கடந்த ஜூன் 20ஆம் தேதி போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் இது குறித்து விசாரணை செய்துள்ளனர். அதற்கு அந்த பெண் தான் தனிமையில் இருந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு குடும்பம் என யாருமே இல்லை என்று தெரிவித்த அவர், இதனால் போரடித்ததால் இப்படிச் செய்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ” நான் தனிமையில் இருந்தேன்.. யாராவது நான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்தேன்” என்று அவர் தெரிவித்தார். “காதலி வாடகைக்கு!” சிங்கிள் இளைஞர்களுக்கு வரப்பிரசாதம் இதுதான்! ஆனா ரூல்ஸை கேட்டால் தலை சுத்தும் ஜப்பானில் தனிமை காரணமாகச் சிலர் இப்படிச் செய்வது இது முதல்முறை இல்லை. முன்னதாக கடந்த 2013ஆம் ஆண்டு தனிமையில் இருந்த பெண் ஒருவர் 6 மாதத்திற்குள் 15,000 முறை போலீசாருக்கு போன் போட்டு டார்ச்சர் செய்துள்ளார்.

அந்த பெண்ணையும் போலீசார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

சென்னை | பெண்களை ரகசியமாக படம்பிடித்து ஆபாசமாக சித்தரித்து செயலியில் விற்பனை செய்த பி.டெக். பட்டதாரி கைது

Next Post

காலையில் மது அருந்துவோரை ‘குடிகாரன்’ என்று சொல்வதை பொறுத்துக்கொள்ள முடியாது: அமைச்சர் முத்துசாமி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காலையில் மது அருந்துவோரை ‘குடிகாரன்’ என்று சொல்வதை பொறுத்துக்கொள்ள முடியாது: அமைச்சர் முத்துசாமி

காலையில் மது அருந்துவோரை ‘குடிகாரன்’ என்று சொல்வதை பொறுத்துக்கொள்ள முடியாது: அமைச்சர் முத்துசாமி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In