Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் டுவிஸ்ட்.. ஜெயிலிலிருந்து வந்த கண்ணனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 17, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
பாண்டியன் ஸ்டோர்ஸ் டுவிஸ்ட்.. ஜெயிலிலிருந்து வந்த கண்ணனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
24
SHARES
39
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ஜெயிலில் இருக்கும் நிலையில் அவரை வெளியில் எடுப்பதற்காக கதிரும் ஜீவாவும் தீவிரமாக முயற்சி செய்கின்றனர்.

ஒரு வழியாக கண்ணனுக்கு ஜாமீன் கிடைத்து விடுகிறது. வீட்டிற்கு வந்த கண்ணனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. இந்த நிலையில் இனி மூர்த்தி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதே நேரத்தில் தனத்திற்கு என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

அதே நேரத்தில் கண்ணனுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஐஸ்வர்யா நான் எப்படியாவது கண்ணனை பார்க்க வேண்டும் என்று கதறி அழுது கொண்டிருக்க மூர்த்தி முதலில் கண்ணனுக்கு ஜாமீன் எடுக்க யாரும் முயற்சி செய்யக் கூடாது என்று கூறி விடுகிறார். ஆனால் தனம் கண்ணன் இந்த தப்பு பண்ணி இருக்கவே மாட்டான். அவனுக்கு நிரூபிப்பதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அவனுடைய குழந்தையை அவன் பார்க்க வேண்டாமா?

அதுக்காகவாவது அவன் வெளியே வந்தாகணும் என்று மூர்த்தியை சமாதானம் செய்கிறார். இந்த நிலையில் ஜீவாவும் கதிரும் கண்ணனை ஜாமினில் எடுப்பதற்கான முயற்சியில் இறங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியான பிரமோவில் கண்ணனுக்கு ஜாமின் கிடைத்திருக்கிறது.

அதே நேரத்தில் அவருடைய வக்கீல் இப்போதைக்கு ஜாமினில் தான் எடுத்திருக்கோம். அவர் தப்பு பண்ணலன்னு ப்ரூவ் பண்ணா தான் இந்த கேஸிலிருந்து வெளியாக முடியும் என்று கூறுகிறார். பிறகு வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருகின்றனர். அந்த நேரத்தில் ஐஸ்வர்யா கண்ணனை பார்த்து ஏன் கண்ணா இப்படி பண்ணிட்ட என்று கேட்க, தனம் முல்லை என அனைவரும் அழுகின்றனர்.

அப்போது மூர்த்தி ரூமில் இருந்து வெளியே வர கண்ணன் மூர்த்தி காலில் விழுந்து அண்ணே நான் எந்த தப்பும் பண்ணல என்ன மன்னிச்சிடுங்க அண்ணே என்று கதறுகிறார். ஆனால் கண்ணனை மன்னிக்காமல் மூர்த்தி போய்விடுகிறார். இந்த நிலையில் குழந்தையை மீனா கொண்டு வந்து கண்ணனிடம் கொடுக்க, கண்ணன் அழுதபடியே உன் நீ பிறக்கும் போது கூட அப்பா கூட இல்லாம போயிட்டனே என்று அழுது கொண்டிருக்கிறார்.

தற்போது இந்த பரபரப்பான பிரமோ வைரல் ஆகி வரும் நிலையில், இது youtubeபில் ட்ரெண்டிங்கில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. ஆனாலும் அதிகமான ரசிகர்கள் கண்ணன் இன்னும் சில நாட்கள் சிறையில் இருந்திருக்கலாம் என்று கருத்து கூறி வருகின்றனர். அதே நேரத்தில் கண்ணனுக்கு அதிகமாக தனம் சப்போர்ட் பண்ணிக் கொண்டிருப்பதால் தனம் மற்றும் கதிரையும் அதிகமான ரசிகர்கள் திட்டிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவரால் தான் இந்த மாதிரி வீட்டிற்கு ஒரு உருப்படாத கேரக்டர் உருவாகிக் கொண்டிருக்கிறது அதுதான் இந்த சீரியல் வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்றும் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோரில் ஐஸ்வர்யாவை போலவே “தப்பான” முடிவில் தனம்.. இனி நடக்கப் போவது இதுதானா..? இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் சித்தியிடம் ஐஸ்வர்யாவும் கண்ணனும் பணம் வாங்கிய விஷயம் இப்ப வரைக்கும் மூர்த்திக்கு தெரியாது. ஏற்கனவே கண்ணன் மீது கோபத்தில் இருக்கும் மூர்த்தி இந்த விஷயம் தெரிந்ததும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை மீண்டும் வீட்டை விட்டு துரத்த போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வேலை அப்படி நடக்கும் போது தான் தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருப்பது கூட குடும்பத்திற்கு தெரிய வரலாம்..? அதை வைத்து தனம் கண்ணன் ஐஸ்வர்யாவை தன் வீட்டில் இருக்க வேண்டும் என்றும் கூறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் – புழல் சிறைக்கு மாற்றம்

Next Post

சென்னை | பெண்களை ரகசியமாக படம்பிடித்து ஆபாசமாக சித்தரித்து செயலியில் விற்பனை செய்த பி.டெக். பட்டதாரி கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை | பெண்களை ரகசியமாக படம்பிடித்து ஆபாசமாக சித்தரித்து செயலியில் விற்பனை செய்த பி.டெக். பட்டதாரி கைது

சென்னை | பெண்களை ரகசியமாக படம்பிடித்து ஆபாசமாக சித்தரித்து செயலியில் விற்பனை செய்த பி.டெக். பட்டதாரி கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In