அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்த கொஞ்ச நேரத்தில் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கரு.நாகராஜன், “அண்ணாமலையை முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு போன்றவர்கள் தரக்குறைவாக, உள்நோக்கத்தோடு பேசி அவர் மீது களங்கம் ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள். அவரை பற்றிப் பேச இந்த மூன்று பேருக்கும் தகுதி கிடையாது. அண்ணாமலை என்பவர் தனிநபர் அல்ல. அவரின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் காழ்ப்புணர்ச்சியோடு ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு ஆகியோர் பேசுகிறார்கள். அவர்கள் தங்களின் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

