Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள் உட்பட 4 பேர் வெட்டி கொலை: மது போதை கும்பல் தலைமறைவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 4, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள் உட்பட 4 பேர் வெட்டி கொலை: மது போதை கும்பல் தலைமறைவு
25
SHARES
41
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நிலத்தில் அமர்ந்து மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை, போதை கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார் (47). அரிசிக்கடை வைத்துள்ளார். அதேபகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். இதனை செந்தில்குமார் தட்டிக் கேட்டுள்ளார்.

அப்போது செந்தில்குமாரை அவர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டவே, அவரது குடும்பத்தை சேர்ந்த மோகன்ராஜ், ரத்தினாம்பாள், புஷ்பவதி ஆகியோர் ஓடி வந்து தடுத்துள்ளனர். அவர்களையும் மது அருந்திய கும்பல் அரிவாளால் வெட்டியது.

இதில் சம்பவ இடத்திலேயே செந்தில்குமார், மோகன்ராஜ், ரத்தினாம்பாள், புஷ்பவதி ஆகியோர் உயிரிழந்தனர். சத்தம் கேட்ட அப்பகுதியினர் அங்கு வந்து பார்த்தபோது, அனைவரும் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக பல்லடம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். பல்லடம் டிஎஸ்பி சவுமியா தலைமையிலான போலீஸார் சென்று, செந்தில்குமாரின் சடலத்தை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர்.

ஆனால் மற்ற 3 பேரின் சடலத்தை கிராம மக்கள் எடுக்கவிடாமல், கொலைகாரர்களை பிடிக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டதால், திருப்பூர் மாவட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, “செந்தில்குமாரின் அரிசி கடையில் குட்டி (எ) வெங்கடேசன் சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை பார்த்து வந்துள்ளார். அவர் தலைமையில் நேற்றிரவு ஒரு கும்பல் செந்தில்குமார் நிலத்தில் அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேரை அந்த கும்பல் வெட்டிவிட்டு தப்பியது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

.

Tags: அரகஇரஉடபடஒரகடமபததகமபலகலசரநததலமறவபணகளபதபரபலலடமமதவடட
Previous Post

மோடியை எதிர்த்து திமுக வேட்பாளரை நிறுத்தினால் நான் போட்டியில்லை: சீமான் உறுதி

Next Post

ஒரே நாடு ஒரே தேர்தல் | இபிஎஸ் ஆதரவுக்கு நெருக்கடி காரணமா? – முத்தரசன் கேள்வி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஒரே நாடு ஒரே தேர்தல் | இபிஎஸ் ஆதரவுக்கு நெருக்கடி காரணமா? - முத்தரசன் கேள்வி

ஒரே நாடு ஒரே தேர்தல் | இபிஎஸ் ஆதரவுக்கு நெருக்கடி காரணமா? - முத்தரசன் கேள்வி

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    மிகவும் வருத்தமான செய்தி அந்த கொலையாளிகள் போதை கும்பல் இல்லை அவர்கள் ரௌடிகள் ரௌடிகள் தான் எப்பொழுதும் ஆயுதத்துடன் இருப்பார் போதை அடிப்பவர்கள் ஆயுதம் வைத்திருக்க மாட்டார்கள் ஒரே நேரத்தில் நான்கு பேர் கொலை செய்யப்பட்டிருப்பதால் உடனடியாக இந்த வழக்கை சிபி சிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In