
சென்னை: தி.நகரைச் சேர்ந்தவர் அலோக்குமார் சதுர்வேதி (60). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், “சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் இடம் ஒன்று இருந்தது.
அதை சிலர் போலி ஆவணம் தயார் செய்து, அதன் மூலம் விற்பனை செய்துள்ளனர். எனவே, எனது இடத்தை மீட்டு மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என குறிப்பிட்டு இருந்தார்.

