Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

லோக்சபா தேர்தல்.. மாறுமா களம்? மோடி கை தான் ஓங்கும்.. கருத்துக்கணிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 29, 2023 - Updated on July 30, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
லோக்சபா தேர்தல்.. மாறுமா களம்? மோடி கை தான் ஓங்கும்.. கருத்துக்கணிப்பு
43
SHARES
69
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

லக்னோ: 80 நாடாளுமன்ற தெகுதிகளை கொண்ட நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் வரும் லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது

என்பது பற்றி டிவி –  கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு சரியாக இன்னும் 10 மாதங்கள் கூட இல்லை என்பதால் தேர்தல் களம் தற்போதே கொதிக்க தொடங்கிவிட்டது. மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது.

அதேவேளையில் பாஜகவை வீழ்த்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு “இந்தியா” என பெயர் வைத்துள்ளது.

நாடு முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா கூட்டணி போட்டியிட முடிவு செய்துள்ளது. தனித்தனியாக பிரிந்து இருந்தால் பாஜகவுக்கே களம் சாதகமாக மாறும் என்பதால் ஓருங்கிணைந்து எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் முடிவு செய்து இருக்கின்றன. இதற்காக பாட்னா மற்றும் பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசித்தன.

விரைவில் மும்பையில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தேர்தல் களம் இப்படி பரபரத்துக் கொண்டு இருக்க கருத்துக்கணிப்புகளையும் செய்தி நிறுவனங்கள் தொடங்கி விட்டன. அந்த வகையில், இந்தியா டிவி -சிஎன்எஸ் இணைந்து நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்தியா முழுவதும் 23,871 ஆண்கள் மற்றும் 20,677 பெண்கள் என மொத்தம் 44,548 வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவுகளை இந்தியா டிவி வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 265 தொகுதிகளுக்கான முடிவினை நேற்று வெளியிட்டு இருந்த நிலையில், மீதமுள்ள 278 தொகுதிகளுக்கான கணிப்புகளை இன்று வெளியிட்டு வருகிறது. அதன்படி, பாஜகவின் கோட்டை என்று சொல்லப்படும் உத்தர பிரதேசத்தில் வரும் லோக்சபா தேர்தலில் யாருக்கு களம் சாதகமாக இருக்கும் என்றும் கருத்துக் கணிப்பு நடத்தி  டிவி – கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தை பொறுத்தவரை நாட்டிலேயே பெரிய மாநிலம் ஆகும். இங்கு 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி 73 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அப்னா தால், எஸ்.பி.எஸ்.பி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட உள்ளன. இதில் பாஜக மட்டும் 70 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெறலாம் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சமாஜ்வாதி கட்சி + ஆர்.எல்.டி கட்சிகள் முறையே 4 மற்றும் 1 இடத்திலும் காங்கிரஸ் கட்சி 2 இடத்தில் வெற்றி பெறலாம் என்றும் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.. எவ்வளவு இடங்கள்?  TV கருத்துக்கணிப்பு உத்தர பிரதேசத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது பாஜக 62 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் தற்போது  TV-கருத்துக் கணிப்பில் பாஜக கடந்த முறையை விட வரும் தேர்தலில் அதிக இடங்களை வெல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. “இந்தியா”வுக்கு நோ.. 2024 தேர்தலிலும் மோடிக்கு கை கொடுக்கும் குஜராத்.. கருத்துக் கணிப்பில் தகவல்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

“திமுக ஆட்சியில் 58 பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறியுள்ளன” – எடப்பாடி யார் குற்றச்சாட்டு

Next Post

பட்டாசு கிடங்கு வெடித்து 9 பேர் உயிரிழப்பு; 15 பேர் பலத்த காயம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் பரிதாபம் - பட்டாசு கிடங்கு வெடித்து 9 பேர் உயிரிழப்பு; 15 பேர் பலத்த காயம்

பட்டாசு கிடங்கு வெடித்து 9 பேர் உயிரிழப்பு; 15 பேர் பலத்த காயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In