Thursday, September 17, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தக்காளி ரேட்டை விட சிக்கன் விலை குறைந்த பரிதாபம்.. தலையில் அடித்துக்கொண்ட ஹைதராபாத் மக்கள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 25, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
தக்காளி ரேட்டை விட சிக்கன் விலை குறைந்த பரிதாபம்.. தலையில் அடித்துக்கொண்ட ஹைதராபாத் மக்கள்
9
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஹைதராபாத்: தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்திலும் தக்காளியின் விலை உச்சம் தொட்டிருந்த நிலையில், ஒருவழியாக இன்று சிக்கனை விட ஒரு கிலோ தக்காளியின் விலை குறைவாக விற்கப்படுகிறது.

தொடர் மழை, விளைச்சல் பாதிப்பு, இதனால் வரத்து குறைவு போன்ற காரணங்களால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. குறிப்பாக சிக்கன் ஒரு கிலோ எவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறதோ அதைவிட அதிகமான விலைக்கு தக்காளி விற்கப்பட்டது. பிறகு கோழி இறைச்சியின் விலையும் உயர்ந்தது.

இப்படியாக போட்டிப்போட்டுக்கொண்டு தக்காளி ஒருபுறமும் கோழி இறைச்சி மறுபுறமும் விலை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் ஒரு கிலோ சிக்கன் ரூ.320க்கு விற்பனையானது.

இந்நிலையில் மார்கெட்டுக்கு வரத்து ஓரளவுக்கு சீராக இருந்ததால் தக்காளி விலை ரூ.150லிருந்து ரூ.75ஆக குறைந்தது. கடைகளில் ரூ.100 என விற்கப்பட்டாலும், உழவர் சந்தையில் ரூ.75க்கு விற்பனை செய்யப்படுகிறது. எதிர்பார்க்காத இந்த விலை குறைவால் மக்கள் உழவர் சந்தை நோக்கி படையெடுக்க தொடங்கினர். தக்காளி விலையே குறைஞ்சு போச்சு இனி சிக்கன் விலை குறையவில்லையெனில் விற்பனையாகாது என்பதை உணர்ந்த விநியோகஸ்தர்கள் ஒரு கிலோ கோழி இறைச்சியை ரூ.200க்கு விற்பனை செய்ய தொடங்கினர். ஞாயிற்று கிழமைகளில் ரூ.220க்கும் மற்ற நாட்களில் ரூ.200க்கும் சிக்கன் விற்பனையாகிறது. ஒரேயடியாக ரூ.120 குறைந்ததால் மக்கள் சிக்கன் கடைகளில் முந்தியடித்துக்கொண்டு கறி வாங்கி வருகின்றனர்.

இதுவே சில்லறை கடைகளில் ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல உயிருள்ள கோழி கிலோ ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளை பொருத்த அளவில், கருவேப்பிலை, கேரட், பருப்பு வகைகள் கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ஷாக் கொடுத்த தக்காளி விலை.. அப்படியே இறங்குவது போல இறங்கி.. யூ டர்ன் போட்டு.. அட போங்க! இருப்பினும், அவரை, பச்சை மிளகாய் உள்ளிட்டவற்றின் விலையானது குறையாமல் அதே விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எப்படியாயினும் அன்றாடம் கூலி தொழில் செய்பவர்கள் 10 ரூபாய்க்கும், 20 ரூபாய்க்கும் காய்கறி வாங்குவது இயலாமல் போயுள்ளது. இந்நிலை மாறும்போதுதான் சாமானிய மக்கள் நிம்மதி பெருமூச்சு விடமுடியும் என்று விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

என்னதான் தக்காளி விலை அதிகமாக இருந்தாலும், விவசாயிகள் இதன் மூலம் பலனடைவதில்லை என்றும், இடைத்தரகர்கள் மற்றும் விற்பனையாளர்கள்தான் பயனடைகிறார்கள் எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

அறக்கட்டளை விருதையும் விட்டு வைக்காத மோடி..! – ‘லோகமான்ய திலக் தேசிய விருது’

Next Post

தமிழக மீனவர்கள் 9 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழக மீனவர்கள் 9 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

தமிழக மீனவர்கள் 9 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In