Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கடற்கரையில் மர்ம பொருள்..! சந்திரயான் 3இல் இருந்து விழுந்ததா? இணையத்தில் பரவும் படங்கள்! என்னாச்சு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 19, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
கடற்கரையில் மர்ம பொருள்..! சந்திரயான் 3இல் இருந்து விழுந்ததா? இணையத்தில் பரவும் படங்கள்! என்னாச்சு
45
SHARES
73
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சிட்னி: ஆஸ்திரேலியாவில் கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரையொதுங்கிய நிலையில், அது சந்திரயான் 3 ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவின் லட்சிய நிலவு திட்டமான சந்திரயான் 3 விண்கலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது இந்தியாவின் விண்வெளி துறைக்கு மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

இந்த சந்திரயான் 3 அடுத்த சுமார் 40 நாட்கள் விண்வெளியில் பயணித்து நிலவை அடைய உள்ளது. இதன் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் இறங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது மட்டும் வெற்றிகரமாக நடந்தால் நிலவில் இறங்கிய 4ஆவது நாடு என்ற சிறப்பை அது பெறும் மர்ம பொருள்: இதற்கிடையே ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்மமான சாட்டிலைட் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது அங்குள்ள மக்களிடையே பெரும் சலசலப்பை உருவாக்கியது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய விண்வெளி ஏஜென்சியும் விளக்கமளித்துள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஜூரியன் விரிகுடாவிற்கு அருகில் இந்த பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு இது வெளிநாட்டிற்குச் சொந்தமான ராக்கெட்டின் ஒரு பகுதி போல இருக்கிறது. இது தொடர்பான படத்தைப் பகிர்ந்த ஆஸ்திரேலியா விண்வெளி ஏஜென்சி, இது ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதால் கடற்கரைக்குச் செல்வோர் அதிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. எங்கே: ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரான பெர்த்தில் இருந்து வடக்கே 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிரீன் ஹெட் கடற்கரையில் தான் அங்குள்ள மக்கள் இந்த அசாதாரண பொருளைக் கண்டுபிடித்துள்ளனர்.

கடற்கரைக்கு வாக்கிங் சென்ற தம்பதி, தண்ணீரில் இந்த மர்மப் பொருள் மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்துள்ளனர். பின்னரை அதை பீச் வாகனத்தின் உதவியுடன் வெளியே எடுத்துள்ளனர். இந்த மர்மப் பொருள் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. இது குறித்து ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு மையம், “மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கடற்கரையில் கண்டறியப்பட்டுள்ள மர்மப் பொருள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. வெளிநாட்டு விண்வெளி அமைப்பு அனுப்பிய ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம்.

இது தொடர்பாகப் பல நாடுகளின் விண்வெளி அமைப்புடன் தொடர்பு கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது. கடற்கரையில் உள்ள மர்மப் பொருள் ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று சொல்லியிருந்தாலும் அது என்ன என்பதை அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையம் வெளிப்படையாக எதையும் கூறவில்லை.

இதற்கிடையே நெட்டிசன்கள் பலரும் இது குறித்து பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சந்திரயான் 3: ஒரு தரப்பினர் இது சந்திரயான் 3 ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் எனக் கூறுகிறார்கள். சந்திரயான் 3 கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் பாய்ந்த போது, அதன் லிப்ட்ஆஃப் ஆஸ்திரேலியாவில் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

எனவே, இது சந்திரயான் 3 ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த பொருளில் பாசி உருவாகியுள்ளது. மேலும், அதிகப்படியான சேறும் சகதியும் கூட படிந்துள்ளது. சந்திரயான் செலுத்தப்பட்டு 3 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளதால் இந்த குறுகிய காலத்தில் இந்தளவுக்குச் சேறும் சகதியும் படிந்துவிடாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஜஸ்ட் பக்கத்திலதான்.. சந்திரயான் 3 வானில் சீறி பாய்ந்தபோது விமானத்திலிருந்த பயணி.. தடதட வீடியோ பதிவு இது சந்திரயான் 3ஆக இல்லை என்றாலும் இது பார்க்க பிஎஸ்எல்வி ராக்கெட்டின் மூன்றாவது ஸ்டேஜை போல இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

அதன் எரிபொருள் டேங்காகவும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இதை யாரும் உறுதி செய்யவில்லை. இன்னும் சில நாட்களில் இது குறித்து உறுதியான தகவல் கிடைக்கும் என கூறப்படுகிறது.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

6 மணி நேர விசாரணை நிறைவு – வீடு திரும்பினார் அமைச்சர் பொன்முடி

Next Post

தருமபுரி அருகே 7 வயது சிறுவன் கொலை – முன்விரோதம் காரணமா என போலீஸ் விசாரணை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தருமபுரி அருகே 7 வயது சிறுவன் கொலை - முன்விரோதம் காரணமா என போலீஸ் விசாரணை

தருமபுரி அருகே 7 வயது சிறுவன் கொலை - முன்விரோதம் காரணமா என போலீஸ் விசாரணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In