Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திருவண்ணாமலை அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்து – 7 பேர் உயிரிழப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 24, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
திருவண்ணாமலை அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்து - 7 பேர் உயிரிழப்பு
10
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று (அக்டோபர் 23) இரவு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரி பாளையம் அருகே, திருவண்ணாமலை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதுப்பேட்டை கூட்டு சாலையில் வந்த போது எதிரே வந்த கார் ஒன்று அரசு பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த டிஐஜி முத்துசாமி, ஆட்சியர் முருகேஷ், காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

மேலும், செங்கம் உட்கோட்ட காவல்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் 11 பேர் பயணம் செய்துள்ளனர்.

விபத்தில், உயிரிழந்தவர்கள் 5 பேரின் விவரம் பின் வருமாறு; கிருஷ்ணகிரி மாவட்டம் கேளமங்கலத்தை சேர்ந்த புனித்குமார், ஊத்தங்கரை, மாரப்பட்டியை சேர்ந்த காமராஜ், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டீபன் கோரோ, பிஷேஸ் மூர்மு, சீமோன் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த இருவரின் அடையாளம் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து செங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே பகுதியில் கடந்த வாரம் அக்டோபர் 15 தேதி பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த லாரி மீது மேல்மலையனூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, புதுப்பேட்டை கூட்டு சாலை பகுதியில் விபத்துகளை தடுக்க, வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் வேக தடுப்புகள் அமைக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Tags: அரகஅரசஉயரழபபகரதரவணணமலபரபரநதமதமதயவபதத
Previous Post

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் திமுக தனது பொறுப்பை தட்டிக் கழிக்கிறது: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

Next Post

தீவிர புயலாக வலுப்பெற்ற ‘ஹமூன்’ – சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தீவிர புயலாக வலுப்பெற்ற ‘ஹமூன்’ - சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தீவிர புயலாக வலுப்பெற்ற ‘ஹமூன்’ - சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    விபத்து நடந்த அதே இடத்தில் ஏற்கனவே விபத்தும் நடந்துள்ளது மேலும் அடிக்கடி விபத்துக்கள் அந்த இடத்தில் நடந்து வருகின்றன என்று கூறப்படுகிறது அந்த விபத்திற்கு காரணம் என்ன என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்து அந்த குறையை போக்கி வாகனத்தில் போவோர் வருவோரின் உயிரை காப்பாற்ற வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In