பாட்னா: பீகாரில் இன்று காலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது ஆண் குழந்தை 9 மணிநேரத்துக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது. இந்த நிலையில் தான் குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டது எப்படி? என்பது பற்றிய சிலிர்க்க வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம் குல் கிராமத்தை சேர்ந்த தம்பதியின் மகன் சுபம் குமார் (வயது 3). இந்நிலையில் சிறுவன் வசிக்கும் பகுதியில் விவசாயி ஒருவர் ஆழ்துளை கிணறு தோண்டினார். அந்த கிணற்றில் தண்ணீர் வரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த விவசாயி மாற்று இடத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினார். இதற்கிடையே தண்ணீர் கிடைக்காத ஆழ்துளை கிணற்றை விவசாயி மூடவில்லை.
திறந்த நிலையிலேய அந்த ஆழ்துளை கிணறு இருந்தது. இந்நிலையில் இன்று காலையில் சுபம் குமார் மூடப்படாத ஆழ்துளை கிணறு அருகே விளையாடினான். அப்போது எதிர்பாராத விதமாக அவன் அந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். இதற்கிடையே சுபம் குமாரை அவரது குடும்பத்தினர் தேடியபோது ஆழ்துளை கிணற்றில் இருந்து அவன் அழும் சத்தம் கேட்டது.
இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
போலீசார் மற்றும் தேசிய மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியை தொடங்கினர். அப்போது 30 முதல் 40 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருப்பது தெரியவந்தது. தொடரும் சோகம்! 300 அடி ஆழ்துளை கிணற்றில் இருந்து.. மீட்கப்பட்ட 2.5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு இதையடுத்து குழாய் மூலம் சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டது.
அதோடு சிறுவனின் செயல்பாட்டை கண்காணிக்கும் வகையில் கேமரா ஆழ்துளை கிணற்றுக்குள் அனுப்பப்பட்டது. இந்த கேமரா மூலம் சிறுவனின் அசைவுகள் கண்காணிக்கப்பட்டது. மேலும் ஜேசிபி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ஆழ்த்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் பள்ளம் தோண்டப்பட்டது. மண் எதுவும் சரிந்து ஆழ்துளை கிணற்றுக்குள் விழாத வகையில் மிகவும் கவனமாக 9 மணிநேரம் இந்த மீட்பு பணி நடந்தது. July 23, 2023 இறுதியாக ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சுபம் குமார் இன்று மாலையில் பத்திரமாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆம்புலன்ஸ் மூலம் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுபம் குமாரை பரிசோதித்த டாக்டர்கள் நலமாக இருப்பதாக தெரிவித்தனர். இருப்பினும் முன்னெச்சரிக்கையாக சுபம் குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

