Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மேகாலயா: முதல்வர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய 11 திரிணாமுல் காங்கிரஸ், 7 பாஜக நிர்வாகிககள் கைது!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 25, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
மேகாலயா: முதல்வர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய 11 திரிணாமுல் காங்கிரஸ், 7 பாஜக நிர்வாகிககள் கைது!
10
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் முதல்வர் கான்ராட் சங்மா முகாம் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் திரிணாமுல் காங்கிரஸ்; 7 பேர் பாஜக நிர்வாகிகள். மேகாலயா மாநிலத்தில் காசி மலைப்பகுதி மக்கள், துரா நகரத்தை மேகாலயா மாநிலத்தின் குளிர்கால தலைநகராக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். இந்த கோரிக்கையை முன்வைத்து 13 நாட்களாக A’chik Conscious Holistically Integrated Krima (ACHIK) என்ற அமைப்பினர் அமைதிவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்துக்கு பாஜக ஆதரவு தெரிவித்திருந்தது. இக்கோரிக்கை தொடர்பாக துராவில் போராட்ட குழுவினருடன் முதல்வர் கான்ராட் சங்மா பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென முதல்வர் இல்லத்தை ஒரு கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக கற்கள் வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் 5 போலீசார் படுகாயமடைந்தனர். சுமார் 1 மணிநேரம் வீட்டை விட்டு முதல்வர் கான்ராட் சங்மா வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மேகாலயாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அத்துடன் துரா நகரில் இரவு நேர ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது.

இத்தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை; அடையாளம் தெரியாத நபர்களே தாக்குதல் நடத்தினர் என போராட்டக் குழுவினர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வீடியோ பதிவுகள் மூலம் முதல்வர் இல்லம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்; 7 பேர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் என மேகாலயா போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கும்பல் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த போலீசார் எண்ணிக்கை 10 ஆகவும் அதிகரித்துள்ளது.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

தமிழக மீனவர்கள் 9 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

Next Post

காஞ்சிபுரம் | ரூ.24 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கில் 2 பேர் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காஞ்சிபுரம் | ரூ.24 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கில் 2 பேர் கைது

காஞ்சிபுரம் | ரூ.24 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கில் 2 பேர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In