லக்னோ: ” மதம் குறித்த எந்த விவாதத்தையும் சமாஜ்வாதி கட்சி விரும்பவில்லை” என அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து லக்னோவில் அகிலேஷ் யாதவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மதம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சியின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. மதம் குறித்த எந்த விவாதத்தையும் சமாஜ்வாதி கட்சி விரும்பவில்லை. அதேநேரத்தில் நாம் பேச வேண்டியது ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தான்.
இது குறித்து நாம் தொடந்து பேசி கொண்டே இருக்க வேண்டும். யாரேனும் மதம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசினால் அதை டிவியில் பத்திரிகையாளர்கள் வெளியிட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

