இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “ராமர் கோவில் கட்டுவதற்கு ஜெயலலிதா செங்கல் அனுப்பினார். அதைத்தான் அண்ணாமலை தற்போது பேசி வருகிறார். ஓட்டுவாங்குவதற்காக அண்ணாமலை இவ்வாறெல்லாம் பேசி வருகிறார். ஆனால் இது மக்கள் மத்தியில் எடுபடாது. ஜெயலலிதாவை சில மாதங்களுக்கு முன்பு ஊழல்வாதி என்று இதே அண்ணாமலைதான் பேசினார். அப்போதும், இப்போதும் அ.தி.மு.க போதுமான அளவுக்கு எதிர்வினையாற்றவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அ.தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டாம் என்றுதான் பா.ஜ.க சென்றது. பிறகு எதற்கு இப்படியெல்லாம் பேசுகிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை அ.தி.மு.கவிடம் சரண்டர் ஆகிவிடலாம் என நினைக்கிறாரா என தெரியவில்லை. அண்ணாமலை வரும் காலத்தில் அரசியலில் மிகப்பெரிய தடுமாற்றத்தை சந்திக்க போகிறார்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88