மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைய உள்ள நிலையில், ஜூன் 1 ஆம் தேதி “இந்தியா” கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆளும் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து “இந்தியா” கூட்டணி என்ற பெயரில் மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டன.
7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் இறுதி கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதற்கு 3 நாட்களுக்கு முன்பு “இந்தியா” கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க:
திடீரென சரிந்து விழுந்த மேடை… அதிர்ந்த ராகுல்காந்தி… பீகாரில் தேர்தல் பரப்புரையில் பரபரப்பு!
ஜூன் 2 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலின் பிணை முடிவடைய உள்ளதால், அதற்கு முன்பாகவே ஆலோசனை கூட்டத்தை நடத்த “இந்தியா” கூட்டணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில், தேர்தலில் சாதகமான முடிவு அமைந்தால், குழப்பத்தை தவிர்க்க, யார் பிரதமராக பதவியேற்பது என்பது முன்கூட்டியே முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.
