பாராளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை துவக்கி விட்டதாக திருவாரூரில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

நாகபட்டினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் செல்வராஜ். இவரது இல்ல திருமண விழா திருவாரூரில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார்.
அப்போது அவர், ’’வரும் மக்களவை தேர்தலுக்கான பரப்புரையை திருவாரூரில் தொடங்கி விட்டேன். தமிழகத்தினை காப்பாற்றி விட்டோம். வரும் தேர்தலில் வெல்வதன் மூலம் இந்தியாவையும் காப்பாற்ற வேண்டும்.
பாஜக ஆட்சியில் 7 விதமான ஊழல்கள் நடந்துள்ளதாக ஜி.ஏ.ஜி அறிக்கை கூறுகிறது. இதன் மூலம் பாஜக மீதான ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இந்நிலையில் ஊழல் குறித்து பேச பிரதமர் மோடிக்கு தகுதி இருக்கிறதா என கேட்கிறேன். மும்பையில் கூட உள்ள இந்தியா கூட்டணி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இந்தியவின் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்’’ என்றார்.


முதலில் தாங்கள் தேர்தலில் கூறிய வாக்குறுதியான தமிழக மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்து மாணவர்களின் நலனை காப்பாற்ற வேண்டுகிறேன் பின்னர் இந்தியாவை காப்பாற்றலாம்