
மதுரை: சமூக வலைதளங்களில் பிரதமர், உள்துறை அமைச்சருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பதிவிடும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் காவல் துறைக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராகிம் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிடும் திமுகவினரை கைது செய்யக் கோரி மதுரை மாநகர் காவல் ஆணையர் நரேந்திரன் நாயரிடம் பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராகிம் மற்றும் நிர்வாகிகள் சனிக்கிழமை மனு அளித்தனர்.

