கோவிலுக்கு வரும் சிறுமிகளுக்கு சாமியார் வேடமணிந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தை சேர்ந்த ரமேஷ் (52) என்பவர் கோலியனூரில் உள்ள புத்துவாயம்மன் கோவிலுக்கு தினமும் மாலை நேரங்களில் காவி உடையணிந்து சாமியார் போன்று சென்று தரிசனம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இந்நிலையில், வழக்கம் போல் கோவிலுக்கு சென்ற ரமேஷ் அங்கு, ஆறு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடத்தில் தெரிவித்தார்.

ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் கோயிலுக்கு சென்ற பொதுமக்கள், போலி சாமியார் ரமேஷை பிடித்து தர்மஅடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பின்னர் போலி சாமியார் ரமேஷை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அந்த போலி ஆசாமிக்கு போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று பூஜைகளும் அர்ச்சனைகளும் செய்து பின்னர் நல்ல முறையில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டுகிறேன்