
உங்களைக் குழப்பி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என நடிகை குஷ்பு வருத்தம் தெரிவித்துள்ளார்.
உடல் எடையைக் குறைத்த நடிகை குஷ்பு, நாளுக்கு நாள் அழகாக மாறிக் கொண்டே வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவர் பார்பி டால் கெட்டப்பில் ஹேர்ஸ்டைல் மாற்றிக் கொண்ட புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ’மாற்றம் ஒன்றே மாறாதது’ எனப் பகிர்ந்திருந்தார். இதனைப் பார்த்த பலரும் நடிகை குஷ்பு முடியைக் குட்டையாக வெட்டிக் கொண்டார் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், அப்படி இல்லை என குஷ்பு பகிர்ந்துள்ளார்.
’நிறைய பேர் நான் முடியை வெட்டிக் கொண்டேன் என் நினைத்து மெசேஜ் செய்திருந்தார்கள். ஆனால், அதை எப்போதும் நான் செய்ய மாட்டேன். அது என்னுடைய புதிய படத்திற்கான டிரையல். முடி என்பது என்னுடைய சொத்து போல. அதை ஒரு நாளும் வெட்ட மாட்டேன். உங்களுடைய அன்புக்கு நன்றி. நான் முன்பு பதிவிட்டிருந்தது உங்களைத் தவறாக வழி நடத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ எனவும் பகிர்ந்துள்ளார்.


ஒரு தப்பும் இல்ல மண்ணாங்கட்டியும் இல்ல இது ஒரு சப்ப மேட்டர் . இதுக்கு மன்னிப்பு வேற டைம் வேஸ்ட்