
சென்னை தண்டையார்பேட்டையில் பிரபல ரவுடி பவுடர் ரவி உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தண்டையார்பேட்டையில் மருத்துவமனை அருகே கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் தொற்று நோய் மருத்துவமனை அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பிரபல ரவுடி பவுடர் ரவி இருசக்கர வாகனத்தில் வந்து கஞ்சா வாங்குவது தெரிய வந்தது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் ரவுடி பவுடர் ரவியை மடக்கிப்பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.

பவுடர் ரவி கைது செய்யப்பட்ட நிலையில், பவுடர் ரவிக்கு விசாகபட்டினத்தில் இருந்து கஞ்சா வருவதாக செல்போன் மூலம் தகவல் வந்தது. இதனை அடுத்து விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே தனிப்படை போலீசார் மறைந்திருந்தனர்.
அப்போது வாளியில் புலியுடன் சேர்த்து 4 கிலோ கஞ்சாவை வைத்து கொடுக்கும் போது குணா, பிரசாத், சம்சுதீன் ஆகிய மூன்று பேரை அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து 4 பேரையும் தனிப்படை போலீஸார் காசிமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் இதில் யாருக்கெல்லாம் தொடபு உள்ளது என்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காவல்துறையின் செயல் சிறப்பாக உள்ளது வரவேற்கப்பட வேண்டியது