21 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது!
நெடுந்தீவு அருகே எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக 21 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. தமிழக மீனவர்கள் சென்ற 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது இலங்கை கடற்படை. கைது செய்யப்பட்டவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே நேற்று முன்தினம் ஒன்பது மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் நேற்று விடுவிக்கப்பட்டனர். தற்போது மீண்டும் 13 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது ராமேஸ்வரம் மீனவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
