Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நதிநீர் பங்கீடு | காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 25, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நதிநீர் பங்கீடு | காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
14
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுடெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளை கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்துகிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கவில்லை. இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் அதனை கர்நாடகா செயல்படுத்தவில்லை. இதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி நீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தது.

இந்நிலையில் கர்நாடக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாகவே பொழிந்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய பிரதான அணைகள் நிரம்பவில்லை. இருப்பினும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கை விசாரிக்க, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் கொண்ட புதிய‌ அமர்வினை அமைத்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த புதிய அமர்வில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், “கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை என்றால், தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அனைத்தும் கருகிவிடும். தண்ணீர் திறப்பு விவகாரத்தில், கர்நாடக அரசு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்ற மறுக்கின்றது. எனவே, கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும்” என வாதிடப்பட்டது.

அப்போது கர்நாடக அரசுத் தரப்பில், “கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை தமிழகம் முறையாக பயன்படுத்தாமல் வீணடித்துவிட்டது. கர்நாடகத்தைப் பொறுத்தவரை, இது வறட்சியான ஆண்டாக இருக்கிறது. அதேநேரம் போதிய மழை இல்லாததால், அணைகளில் தண்ணீர் குறைவாக இருக்கிறது. இந்த சூழலில், எங்களால் எப்படி தண்ணீர் திறந்துவிட முடியும். இருப்பினும், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழகத்துக்கு கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், “மிக குறைவான அளவு தண்ணீரையே தற்போது கர்நாடக அரசு விடுவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்ட அளவு தண்ணீரைக்கூட கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை முழுமையாக கர்நாடக அரசு பின்பற்றினால் போதும்” என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், “காவிரி மேலாண்மை ஆணையம் 15 ஆயிரம் கன அடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அந்த உத்தரவை கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்தி இருக்கிறதா என்பது குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

.

Tags: அறககஆணயமஉசசஉததரவகவரசயயதககலநதநரநதமனறமபஙகடமலணம
Previous Post

போட்டோஷூட் அலப்பறை: மாப்பிள்ளை மீது ஏறி ஸ்டண்ட், மாஸ் மணமகள்.. வைரல் வீடியோ

Next Post

அதிர்ச்சி… தமிழக அரசு உத்தரவால் நிலம், குடியிருப்பு விலை உயர வாய்ப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிர்ச்சி... தமிழக அரசு உத்தரவால் நிலம், குடியிருப்பு விலை உயர வாய்ப்பு!

அதிர்ச்சி... தமிழக அரசு உத்தரவால் நிலம், குடியிருப்பு விலை உயர வாய்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In