Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

போட்டோஷூட் அலப்பறை: மாப்பிள்ளை மீது ஏறி ஸ்டண்ட், மாஸ் மணமகள்.. வைரல் வீடியோ

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 25, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
போட்டோஷூட் அலப்பறை: மாப்பிள்ளை மீது ஏறி ஸ்டண்ட், மாஸ் மணமகள்.. வைரல் வீடியோ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

View this post on Instagram

A post shared by Zevar bride (@zevarbride)

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்களின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் பல விதமான திருமண சடங்குகளையும், அவற்றில் நடக்கும் வினோதமான விஷயங்களையும் காண முடிகின்றது. நம் நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களை போல கொண்டாடப்படுகின்றன. இவற்றில் சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம். ஆனால் இந்நாட்களில் திருமண போட்டோஷூட் என்ற பெயரில் போட்டோ எடுப்பவர்களும் ஜோடிகளும் செய்யும் அலப்பறைகளை தாங்க முடிவதில்லை.

 

இதுவரை திருமணத்திற்கு முந்தைய மற்றும் திருமணத்திற்குப் பிறகான பல போட்டோஷூட்டுகளை நாம் பார்த்திருக்கிறோம். இந்த சமயங்களில் மணமகனும் மணமகளும் பல வித போஸ்களை கொடுக்கிறார்கள். இது தவிர தங்களுக்கு பிடித்தமான இடங்களுக்கு சென்று நடனமாடி வீடியோ ஷூட்டும் சிலர் செய்வதுண்டு.

பல நேரங்களில் திருமண ஜோடிகள் போடோஷூட் வித்தியாசமாக இருக்க வேண்டும் என வினோதமான பல விஷயங்களை செய்கிறார்கள். இவற்றில் சில சமூக ஊடகங்களில் வைரல் ஆவதுண்டு. சமீபத்திலும் அப்படி ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இதில் மணப்பெண் ஸ்டண்ட் செய்து போட்டோஷூட் செய்துள்ளார். ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட் உள்ளது. இதை மக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பார்த்து வருகிறார்கள்.

ஸ்டண்ட் செய்யும் மணப்பெண்

இந்த நாட்களில் மக்கள் சமூக ஊடகங்களில் வைரலாவதற்கு விசித்திரமான விஷயங்களைச் செய்யத் தொடங்கியுள்ளனர். போட்டோஷூட்டிற்காக மணமகள் ஒருவர் மணமகனின் மீது ஏறி நிற்பதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. மணமகள் தனது ஒரு காலை மணமகனின் தலையில் வைத்தும், மற்றொரு காலை மணமகனின் முழங்காலில் வைத்தும் பிரமாண்டமான ஸ்டண்ட் செய்கிறார்.

தனது ஸ்டண்டில் தொடர்ந்து இன்னும் பல வித்தைகளை செய்யும் மணப்பெண், மணமகனின் கையை விட்டு, தனது இரண்டு கைகளையும் காற்றில் விரிக்க ஆரம்பிக்கிறார். இதுமட்டுமின்றி மணமகள் வீடியோ ஷூட்டிற்காக தனது கைகளை பறவைகளை போல அசைக்கிறார். இந்த மணப்பெண் வித்தியாசமான ஸ்டைலில் போஸ் கொடுத்து பயனர்களை ஆச்சரியப்படுத்துகிறார்.

அசத்தல் பேலன்ஸ்.. அற்புதமான ஸ்டண்ட்

‘யே கர்கே திகாவோ…’ என்ற இந்தி பாடலுக்கு, பல வித அசத்தலான ஸ்டண்டுகளை செய்கிறார். இதை பார்க்கும் போது நமக்கு இவர் கீழே விழுந்து விடுவாரோ என பயம் பற்றிக்கொள்கிறது. ஆனால் அவர் மிக கூலாக இருக்கிறார். இதற்கிடையில் மணமகள் தனது இடுப்பில் கை வைத்து நடனமாடுவது போலவும் ஷூட் செய்கிறார்.

இந்த முழு போட்டோ ஷூட்டின் போது, ​​மணமகன், மணமகளின் பேலன்ஸ் போய்விடக்கூடாது என்பதற்காக, மணமகளின் கால்களை கையால் பிடித்தபடி நிற்பதை காண முடிகின்றது. இருப்பினும், இடையிடையில், மணமகன் மணமகளுக்கு போஸ் கொடுக்கவும் நினைவூட்டுகிறார். இப்படியே மிகவும் பாதுகாப்பான முறையில் ஸ்டண்ட் செய்துகொண்டே போட்டோஷூட் செய்துவிட்டு மணப்பெண் கீழே இறங்குகிறார்.

இணையத்தில் வீடியோ வைரல் ஆனது:

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் zevarbride என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ஒரு பயனர், ‘அவர் ஒரு பெண், அவரால் எதையும் செய்ய முடியும்’ என்று எழுதியுள்ளார். ‘அந்த மாப்பிள்ளையையும் பாராட்ட வேண்டும்.. முழுமையாக அவருக்கு ஆதரவாக உள்ளார்” என மற்றொரு பயனர் அவரை பாராட்டியுள்ளார்.

 

.

Tags: BrideFunnyNetizensPhotoshootStunsStuntvideoviralweddingஅலபபறஏறபடடஷடமணமகள.மதமபபளளமஸவடயவரலஸடணட
Previous Post

“ரோகிணியை தப்பா பேசுறாங்க.. எனக்கு யாரும் சோறு போட வேண்டாம் ” – ரகுவரன் சகோ ரமேஷ் பேட்டி!

Next Post

நதிநீர் பங்கீடு | காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நதிநீர் பங்கீடு | காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நதிநீர் பங்கீடு | காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In