Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மதுரையில் 40 ஏக்கர் ரயில்வே நிலத்தை தனியாருக்கு விற்க முயற்சி: சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 17, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மதுரையில் 40 ஏக்கர் ரயில்வே நிலத்தை தனியாருக்கு விற்க முயற்சி: சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை: மதுரையில் ரூ.1,200 கோடி மதிப்பிலான 40.61 ஏக்கர் ரயில்வே நிலத்தை தனியாருக்கு விற்கும் முயற்சியை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இந்தியாவின் முக்கியமான நகரங்களில் இருக்கும் ரயில்வே நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். அதன்படி மதுரை அரசரடியிலுள்ள 11.45 ஏக்கர் பரப்புள்ள ரயில்வே மைதானம், 29.16 ஏக்கர் பரப்புள்ள ரயில்வே காலனி நிலம் உள்பட மொத்தம் 40.61 ஏக்கருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இத்தகைய நிலங்களை வணிக பயன்பாட்டுக்கு தனியாருக்கு கொடுப்பதற்காக ‘ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம்’ தங்கள் வசம் ஒப்படைக்குமாறு, மதுரை ரயில்வே கோட்டத்தை கேட்டுள்ளது. சுமார் ரூ.1,200 கோடியிலான நிலத்தை தனியாருக்கு விற்கும் முயற்சியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ரயில்வே சொத்து மக்களின் சொத்து, தேசத்தின் சொத்து, அதனை தனி நபர்களுக்கு தாரை வார்ப்பதை அனுமதிக்கமாட்டோம். அரசரடி ரயில்வே மைதானம் பல்லாயிரம் வீரர்களை உருவாக்கிய மைதானமும், ரயில்வே காலனியும் மதுரையின் அடையாளங்களாக உள்ளன.

இவற்றை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும். இந்நிலத்தை பாதுகாக்க மதுரை மக்கள் மாபெரும் போராட்ட இயக்கத்தை முன்னெடுப்பார்கள்” என்று அவர் அவர் கூறினார். அப்போது, மார்க்சிஸ்ட் கட்சி மாநகர மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் ரா.விஜயராஜன், துணை மேயர் தி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வை. ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.

.

Tags: எம.ப..ஏககரகறறசசடடச.வஙகடசனதனயரககநலததமதரயலமயறசரயலவவறக
Previous Post

அதிமுகவின் 52வது ஆண்டு விழா – செல்லூர் கே.ராஜூ தலைவர்களுக்கு மரியாதை…

Next Post

சென்னை | ரூ.30 லட்சம் வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த 7 பேர் கும்பல் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை | ரூ.30 லட்சம் வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த 7 பேர் கும்பல் கைது

சென்னை | ரூ.30 லட்சம் வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த 7 பேர் கும்பல் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In