Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மகன் சாவில் சந்தேகம் : போலீசார் அலட்சியத்தால் விரக்தியில் தாய், தங்கை தற்கொலை..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 27, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
சூளகிரியில் விபத்தில் மகன் உயிரிழப்பு: தாய், தங்கை தற்கொலை
41
SHARES
66
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் தோரிப்பள்ளி அருகேயுள்ளஉங்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்வெங்கட்ராமப்பா (52). இவரது மனைவி மீனாட்சி(47), மகன் கிரி (23), மகள் காவ்யா (18).

கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி சூளகிரி அருகே நடந்த விபத்தில் சிக்கிய கிரி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி செப். 7-ம்உயிரிழந்தார். இதனால் வேதனையடைந்த நிலையில் இருந்த மீனாட்சி மற்றும் காவ்யா ஆகியோர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

தகவலறிந்து வந்த சூளகிரி போலீஸார் இருவரது உடல்களையும் மீட்க முயன்றனர். அதற்குமீனாட்சியின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். கிரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மீனாட்சியும், காவ்யாவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், விபத்து நேரிட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவைக் காண்பிக்குமாறு கூறியும்,அதைக் காட்டவில்லை. இதனால்தான் மீனாட்சி, காவ்யா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, டிஎஸ்பி பாபு பிரசாந்த், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, கிரி வழக்கில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, உறவினர்கள் சமாதானமடைந்தனர். பின்னர் இருவரது உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், தற்கொலைக்கு முன்னர் காவ்யா எழுதிய 2 பக்க கடிதத்தைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

Tags: உயரழபபசளகரயலதஙகதயதறகலமகனவபததல
Previous Post

பட்டா கத்தியால் கேக் வெட்டிய இந்து எழுச்சிப் பேரவை அமைப்பின் நிர்வாகி கைது

Next Post

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் | ஆளுநர் மாளிகையின் புகாருக்கு டிஜிபி மறுப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் | ஆளுநர் மாளிகையின் புகாருக்கு டிஜிபி மறுப்பு

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் | ஆளுநர் மாளிகையின் புகாருக்கு டிஜிபி மறுப்பு

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கேன் தற்கொலை அப்படிங்கறது முட்டாள் தனமான முடிவு எந்த ஒரு பிரச்சனையும் எதிர்நோக்கி வெற்றி பெற வேண்டும் அதற்கு நீங்கள் உங்களுடைய உண்மையான நண்பர்களின் உதவியை நாட வேண்டும் அந்த வட்டாரத்தில் நல்ல பத்திரிகை யாளர்களை வைத்துக் கொள்வது நல்லது பத்திரிகையாளர்களின் மூலம் எளிதாக வெற்றி பெற முடியும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In