Friday, October 30, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஷாங்காய்: 100 ஆண்டுகளில் இல்லாத `வெப்பம்' | வடகொரியாவின் ராணுவ உளவு செயற்கைக்கோள் – உலகச் செய்திகள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 30, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
ஷாங்காய்: 100 ஆண்டுகளில் இல்லாத `வெப்பம்' | வடகொரியாவின் ராணுவ உளவு செயற்கைக்கோள் - உலகச் செய்திகள்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சீனா தனது சொந்த விண்வெளி நிலையமான டியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு (Tiangong Space Station) மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பியிருக்கிறது. ஒரு நாடு முதன்முறையாக ஒரு சிவில் விஞ்ஞானியை (Civilian Scientist) விண்வெளிக்கு அனுப்பியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொலம்பியா நாட்டின் அமேசான் பகுதியில், விமான விபத்தின்போது காணாமல்போன நான்கு குழந்தைகளைத் தேடும் பணி ஒரு மாத காலமாகத் தொடர்ந்து வருகிறது. அவர்கள் உயிருடன் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்திருப்பதால், அவர்களைத் தேடும் பணியைத் தொடர்வதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

`தன்பாலின உறவில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்’ என்ற மசோதா உகாண்டா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், இந்த மசோதாவில் உகாண்டா அதிபர் யோவேரி முசேவேனி கையெழுத்திட்டிருக்கிறார். இது மனித உரிமை மீறல் என ஜோ பைடன் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

2015-ல் எகிப்திய கிறிஸ்துவர்களின் தலையைத் துண்டித்தது, சிர்டே நகரைக் கைப்பற்றியது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட இஸ்லாமிய பிராசார அமைப்பைச் சார்ந்த 23 பேருக்குத் தூக்குத் தண்டனையும், 14 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து லிபிய நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

குயனாவிலுள்ள பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 5 வயது சிறுவன் உட்பட பலர் பலியான விவகாரத்தில், இங்கு தங்கியிருந்த மாணவி ஒருவரே தீவைத்து எரித்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், அவர் தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நகர்வுகளைக் கண்காணிக்கும் நோக்கில், ஒரு ராணுவ உளவு செயற்கைக்கோளை வரும் ஜூன் மாதத்தில் செலுத்த வடகொரியா திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் பகுதியில் ஏற்பட்டிருக்கும் பயங்கர காட்டுத்தீயால்‌, ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.

86 ஆண்டுக்கால பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டி வரலாற்றில், சீனாவிலிருந்து கலந்துகொள்ளும் முதல் வீரர் என்கிற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் ஜாங் ஜிசென் (Zhang Zhizhen).

மெல்போர்னிலுள்ள இரவு விடுதி ஒன்றில், முதலைகள் உள்ளிட்ட உயிருள்ள பிராணிகளை அனுமதித்த சம்பவம் அந்தப் பகுதியில் பேசுபொருளாகியிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. சமூக வலைதளப் பிரபலங்களை அழைத்து, முதலைகளுடன் புகைப்படம் எடுத்துப் பதிவிட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

சீனாவின் ஷாங்காய் நகரில் 36 டிகிரியைத் தொட்டது வெப்பநிலை. ஷாங்காய் நகரில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் வெப்பம் பதிவாகியிருக்கிறது. இதனால் மக்கள் தவித்துவருகின்றனர்.

.

Tags: ஆணடகளலஇலலதஉலகசஉளவசயதகளசயறகககளரணவவடகரயவனவபபம039ஷஙகய
Previous Post

Keerthy Suresh: “அவர் என் மகளின் நண்பர்!”- திருமண வதந்தி குறித்து கீர்த்தி சுரேஷின் தந்தை | keerthy suresh’s father talks about his daughter’s marriage rumour

Next Post

YouTuber Irfan : விபத்தை ஏற்படுத்திய இர்பானின் சொகுசு கார்.. பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்று விடுவிப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
YouTuber Irfan : விபத்தை ஏற்படுத்திய இர்பானின் சொகுசு கார்.. பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்று விடுவிப்பு!

YouTuber Irfan : விபத்தை ஏற்படுத்திய இர்பானின் சொகுசு கார்.. பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்று விடுவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In